Sunday, June 5, 2022

புதியபதிவுகள்

மு.வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) (மு.வ./மு.வரதராசனார்) தமிழ் எழுத்தாளர், பழந்தமிழ் நூல்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர், கல்வியாளர். தமிழகத்தின் புகழ்பெற்ற திருக்குறள் உரை மு.வரதராசன் எழுதியது. கல்வியாளராகத் தன் மாணவர்களிடம் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தியவராகத் திகழ்ந்தார். மு.வரதராசன் மீ.ப.சோமு (ஜூன் 17, 1921 - ஜனவரி 15, 1999) தமிழ் எழுத்தாளர். நாவல்களும் சிறுகதைகளும் மரபுக்கவிதைகளும் எழுதியவர். பண்ணிசை ஆராய்ச்சியாளர். இதழாளர். வானொலி நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணியாற்றினார். மீ.ப.சோமு பொன்னியின் செல்வன் (1950 – 1955) கல்கி எழுதிய பொதுவாசிப்புக்குரிய வரலாற்று நாவல். இது ஐந்து பாகங்களைக் கொண்டது. இராஜராஜ சோழர் என்று அழைக்கப்பட்ட அருண்மொழிவர்மன், தனக்குக் கிடைத்த சோழப் பேரரசின் அரியணையைத் தியாகம் செய்தமையை விவரிக்கிறது . ‘பொன்னியின் செல்வன்’ என்பது, இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று. தமிழ் வரலாற்றின் பொற்காலம் எனப்படும் சோழர் காலத்தையும், அதில் தலையாயவர் எனப்படும் ராஜராஜ சோழனையும் சித்தரிப்பதனால் தமிழகத்தில் மிகப்புகழ்பெற்ற நாவலாக இந்நூல் உள்ளது. தமிழ்ப் பதிப்புலகத்தில் பொதுவாசிப்புக்குரிய நாவல் வகையில் பொன்னியின் செல்வன் நாவல்தான் முதலிடத்தில் உள்ளது. பொன்னியின் செல்வன் கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி, செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) தமிழில் பொதுவாசகர்களுக்கான பெரும்புகழ்பெற்ற கற்பனாவாதக் கதைகளை எழுதியவர். இந்திய தேசிய இயக்கத்தில் இருந்து உருவாகி வந்த படைப்பாளி. சுதந்திரப்போராட்ட வீரர். தமிழிசை இயக்கத்தை முன்னெடுத்தவர். தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் உரைநடையின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்று கற்பனாவாத நாவல்கள் தமிழ் பொதுவாசிப்புத்தளத்தைச் சேர்ந்த பெரும் செவ்வியல்படைப்புகள் எனப்படுகின்றன. கல்கி வார இதழை நிறுவியவர். தமிழில் கேளி கல்கி பாலகுமாரன் (ஜூலை 05, 1946 - மே 15, 2018) தமிழில் பொதுவாசிப்புக்கான சமூகநாவல்களையும், வரலாற்று நாவல்களையும் எழுதிய எழுத்தாளர். திரைப்பட எழுத்தாளர். யோகி ராம்சுரத்குமார் வழிவந்த ஆன்மீகவாதி. இந்து ஆன்மிகம் சார்ந்த நூல்களையும் பக்திநூல்களையும் புராண மறுஆக்கக் கதைகளையும் எழுதியவர். தன் காலகட்டத்தின் பொதுவான உளநெருக்கடிகளையும் பாலியல் சிக்கல்களையும் ஆன்மிகத்தேடல்களையும் புனைவுகளா பாலகுமாரன் வில்லியம் மில்லர் (William Miller) (ஜனவரி 13, 1838 – ஜுலை 1923) கல்வியாளர், மதப்பிரச்சாரகர், தமிழ்நாட்டில் நவீனக்கல்விக்கும் நவீன இலக்கியத்திற்கும் அடித்தளம் அமைத்த முன்னோடிகளில் ஒருவர். நவீனத் தமிழ் ஆய்வின் தொடக்கப்புள்ளியும் கூட. ஸ்காட்லாந்துக்காரரான வில்லியம் மில்லர் ஃப்ரீ சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்து (Free Church of Scotland) அமைப்பின் பிரச்சாரகர். மதராஸ் மாகாணச் சட்டச்சபையில் 1893, 1895, 1899 மற்றும் 1902-ல் நான்குமுறை உறுப்பினராக இருந்தார். வில்லியம் மில்லர் இங்கிலாந்து மன்னர் வழங்கிய கைசர் இ ஹிந்த் விருதைப் பெற்றவர். வில்லியம் மில்லர் அழகுநிலா (1974) சிங்கப்பூர் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள், குழந்தை இலக்கியம் ஆகியவற்றை எழுதி வருகிறார். குறிப்பிடத்தக்க இலக்கிய விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார் அழகுநிலா இளங்கோ கிருஷ்ணன் (பிறப்பு:மார்ச் 15, 1979) தமிழில் நவீனக்கவிதைகள் எழுதும் கவிஞர். உருவகத்தன்மையும் இசைத்தன்மையும் கொண்ட கவிதைகளை எழுதுபவர். கவிதை பற்றிய அழகியல் கோட்பாடுகளை விவாதிப்பவராகவும், விமர்சகராகவும் அறியப்படுகிறார். இளங்கோ கிருஷ்ணன் எம்.வேதசகாயகுமாருக்கு அவர் தமிழ்ச்சிறுகதைகள் பற்றி எழுதியதுபோலவே இலங்கை சிறுகதைகள் பற்றி கறாரான அழகியல் விமர்சனநூல் ஒன்றை எழுதவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. “இலங்கையின் இலக்கிய வரலாற்றை எங்கே வேண்டுமென்றாலும் தொடங்கலாம். இலக்கியக்கலையின் வரலாற்றை இலங்கையர்கோனில் இருந்து தொடங்கவேண்டும்” என்று அவர் சொல்வதுண்டு இலங்கையர் கோன் இலக்குவனார் (நவம்பர் 17, 1909 - செப்டெம்பர் 3, 1973) தமிழறிஞர். இலக்கண ஆய்வாளர். தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். தனித்தமிழியக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். திராவிட இயக்க ஆதரவாளர். பேராசிரியர். இலக்குவனார்

No comments:

Post a Comment