Thursday, September 29, 2022

கட்டுரை

  தியாகராஜர், பாரதியார், கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை போன்றோரின் பாடல்கள் சிலவற்றை ஸ்வரப்படுத்தியிருக்கிறார். அண்ணாமலை ரெட்டியார்ரின் 'காவடிச்சிந்தையும்’ பதிப்பித்தார்.

ku azakirisami

வில்லியம் தாமஸ் சத்தியநாதனின் (டபிள்யூ.டி.சத்தியநாதன்) குடும்பத்துடன் தங்கினார். 1878-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கிருபா சத்தியநாதன் மருத்துவப்பணியில் காசநோய் தொற்றுக்கு ஆளானார். 1879-ல் புனேவில் உள்ள தனது சகோதரியிடம் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்றார்.

கிருபா சத்தியநாதனின் மகன் சாமுவேல் சத்தியநாதன்னை காதலித்து1881-ல் மணந்துகொண்டார். சாமுவேல் கேம்ப்ரிட்ஜ் மாணவர். சாமுவேல் ஊட்டியில் 'Breeks Memorial School' பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றச் சென்றார். கிருபா மருத்துவக் கல்வியை முடிக்காமல் ஊட்டிக்குச் சென்று அங்கே கல்விப்பணிகளில் ஈடுபட்டார். ஊட்டியில் அவருடைய காசநோய் கட்டுக்குள் இருந்தது. அங்குதான் அவர் தன் ஆரம்பகட்ட கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார்.

கிருபா

மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்த பொ. பாண்டித்துரைத் தேவர் அக்டோபர் 17, 1902-ல் குமாரசாமிப் பிள்ளையை சங்க உறுப்பினராக்கினார். சங்கத்தின் பத்திரிகையாகிய செந்தமிழுக்கு பல கட்டுரைகளை எழுதினார். 1923-ல் புலவரின் கடைசி நூலாகிய இராமோதந்தம் நூலை இச்சங்கம் பதிப்பித்தது. மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டித தேர்வுகளுக்கு தமிழ்மொழி, தமிழ் இலக்கணம் ஆகிய பாடங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்று பணியாற்றினார்.

அ.குமாரசாமி புலவர்

Wednesday, September 28, 2022

kunRakkudi

 குன்றக்குடி அடிகளாரின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்ககலையில் படிப்பதற்காக அவர் குடும்பம் சிதம்பரத்திற்கு இடம்பெயர்ந்தது.சிதம்பரம் அருகே திருவேட்களம் என்னும் ஊரில் வாடகைவீட்டில் வசித்தனர். சீனிவாசம் பிள்ளையும் குடும்பத்தினரும் மாடுகளை வளர்த்து பால் வணிகம் செய்தனர். பல்கலை கழகப் பேராசிரியர்களுக்கு பால் கொண்டுசென்று அளித்தபோது அவர்களிடம் அணுக்கமான குன்றக்குடி அடிகளார் ந. மு. வேங்கடசாமி நாட்டார் ,ரா.பி. சேதுப்பிள்ளை , சுவாமி விபுலானந்தர் ஆகியோரிடம் அணுக்கமாகி தமிழார்வத்தை அடைந்தார்.

kunRakkudi 

வெகு ஜன இதழ்களில் கோவி. மணிசேகரனின் படைப்புகள் தொடர்ந்து வெளியாகின. குமுதம், விகடன், கல்கிகலைமகள், குங்குமம், இதயம் பேசுகிறது என தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் எழுதினார். ’ஒரு தீபம் ஐந்து திரிகள்’ என்பது இவரது நூறாவது நாவல். ராஜராஜ சோழனின் வரலாற்றை கலைமகள் இதழில் ’ராஜநாகம்’ என்ற பெயரில் எழுதினார். கோவி. மணிசேகரன் 95 சரித்திர நாவல்கள், 47 சமூக நாவல்கள், 5 நாடக நூல்கள், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 10 கவிதை நூல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவர் எழுதிய 'குற்றாலக் குறிஞ்சி’ என்ற நூல், 1992ல் சாகித்ய அகாதமி பரிசு பெற்றது.

koovi 

-1970 முதல் வெளிவந்த கசடதபற சிற்றிதழின் குழுவில் ஞானக்கூத்தனும் இருந்தார். அதன் முதல் இதழில் தமிழை எங்கே நிறுத்தலாம் என்னும் ஞானக்கூத்தனின் கவிதை வெளிவந்தது. நா.கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராக இருந்தார். ஞானக்கூத்தன், க்ரியா ராமகிருஷ்ணன், சா.கந்தசாமி ஆகியோர் அதில் பணியாற்றினர்

editedit source

1978 முதல் ஆத்மாநாம் ஆசிரியராக இருந்து வெளிவந்த  என்ற கவிதைக்கான இதழில் ஞானக்கூத்தன் முதன்மைப்பங்காற்றினார். அதில் கவிதைகளுடன் கவிதை பற்றிய குறிப்புகளையும் மொழியாக்கங்களையும் எழுதினார். ஆத்மாநாம் தற்கொலைசெய்துகொண்டபின் மேலும் ஓர் இதழ் ஞானக்கூத்தன் பொறுப்பில் வெளிவந்தது

njaanakkuuththan

Saturday, September 24, 2022

sivaithaa

  சி.வை. தாமோதரம் பிள்ளை ஆரம்பக்காலத்தில் கிராமப் பாடசாலைமுறையான நிலாப்பள்ளியில் தந்தையிடம் படித்தார். சுன்னாகம் முத்துக்குமார நாவலரிடம் இலக்கணம் படித்தார். பின்னர் அமெரிக்க மிஷனரிகள் தொடங்கிய வட்டுக்கோட்டை குருமடம் அமைப்பில் 1844 அக்டோபர் 12 ஆம் தேதி சேர்ந்து 1850 வரை பயின்றார். தெல்லிப்பழை (தெல்லியம்பதி) அமெரிக்க இலங்கை மிஷன் கல்லூரியிலும் படித்தார் (1850-52). தமிழ்ப்புலவர் படிப்பில் சான்றிதழ் பெற்றார். ஆங்கில மொழி அறிவும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பும் பெற்றார். வட்டுக்கோட்டை குருமடத்துக்கு உரிமையான கோப்பாய் ஆசிரியர் கல்லூரியில் 1852 செப்டெம்பர் முதல் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது மாணவர்களுக்காக குமரகுருபரரின் நீதிநெறிவிளக்கம் என்னும் நூலை உரை எழுதி வெளியிட்டார் என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.

1855-ல் வட்டுக்கோட்டை குருமடம் மூடப்பட்டது. 1855-ல் சென்னையில் பீட்டர் பெர்சிவல் நடத்தி வந்த தினவர்த்தமானி வாரப்பத்திரிகையில் சி.வை.தாமோதரம்பிள்ளை உதவியாசிரியராகச் சேர்ந்தார். பத்திரிகைப் பணியுடன் பர்னல் பண்டிதர், வால்டர் எலியட், லூஷிங்டன் ஆகியோருக்கு தமிழ் கற்பிக்கும் பணியையும் செய்தார். சென்னையில் மிரன் வின்ஸ்லோ நடத்தி வந்த அமெரிக்க மதராஸ் மிஷன் அமைப்பின் அகராதிப்பணிகளுடன் தொடர்புகொண்டிருந்தார்

si.vai thaamootharam

ச.வே.சுப்ரமணியம் தீவிரமான தமிழ்ப்பற்றில் இருந்து உருவாகும் வழிபாட்டுணர்வுடன் ஆய்வுகளை மேற்கொண்டவர். ஆகவே பெரும்பாலும் நயம்பாராட்டல், விதந்தோதல் ஆகிய கோணங்களிலேயே அவருடைய ஆய்வுகள் உள்ளன. மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளைஎஸ். வையாபுரிப் பிள்ளைகே.என். சிவராஜ பிள்ளை போன்ற ஆய்வாளர்களின் புறவயமான பார்வையோ முறைமையோ அவரிடமில்லை. தமிழ் நூல்களின் காலங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்கிறார்.

savee supramaniyam

-----------

டேனியல் பூர் மதுரையில் ஆறுவருடங்கள் இருந்தார். முப்பத்தேழு பள்ளிக்கூடங்களை நிறுவினார். ஊர்கள் தோறும் சென்று மதப்போதனை செய்து, கல்விநிலையங்களை உருவாக்கினார். பலமுறை மக்களிடம் குதிரைமீது அமர்ந்துகொண்டே உரையாற்றினார் . ஓராண்டில் ஐம்பத்தாறு பள்ளிகளாக பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்தினார். 1836ல் திண்டுக்கல், திருமங்கலம் ஆகிய ஊர்களிலும் 1838ல் திருபுவனத்திலும் அமெரிக்க பள்ளிகள் தொடங்கப்பட்டன. பூர் மதுரை அமெரிக்கன் மிஷனை வலுப்படுத்தினார். மதுரையில் மதுரை அமெரிக்கன் கல்லூரியை நிறுவினார் (பார்க்க அமெரிக்க மதுரை மிஷன்)

deeniyal puur

---------------


Friday, September 16, 2022

கட்டுரைகள்

  ஞானியார் சுவாமிகளின் இரு இயல்புகளை திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் தன் தன்வரலாற்றில் குறிப்பிடுவதை வல்லிக்கண்ணன் மேற்கோளாகச் சுட்டுகிறார். ஞானியார் சுவாமிகள் தன் 16-ஆவது வயதில் துறவு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அப்போது தன் ஆசிரியருக்கு வாக்களித்ததன்படி மடத்தின் தலைவருக்குரிய நோன்புகளில் சமரசம் செய்துகொள்ளவே இல்லை. தன் வாழ்நாள் முழுக்க மேனா என்னும் மூடிய பல்லக்கிலேயே பயணம் செய்தார். திரு.வி.க உள்ளிட்ட பலர் வற்புறுத்தியும் அவர் காரில் ஏறவில்லை. அவரை 1941-ல் இராமசாமி நாயுடு என்னும் அன்பர் தென்னாப்ரிக்காவுக்கு அழைத்தபோது தன் நோன்புகளுக்கு கடல்கடத்தல் எதிரானது என மறுத்துவிட்டார். ஆனால் குடை, கொடி, தீவட்டி, சாமரம் போன்ற பழங்கால வழக்கங்களை ஆடம்பரமானவை என தவிர்த்துவிட்டார்.

ஞானியார் அடிகள் வீரசைவத்தின் உறுதியான சைவப்பற்றை மதவெறியாக ஆக்கிக் கொள்ளவில்லை. வைணவர் இல்லங்களில் ஆண்டாள் வரலாறு உள்ளிட்ட சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கிறார். புதுச்சேரியில் சின்னையா ஞானப்பிரகாச முதலியார் என்னும் கிறிஸ்தவ அன்பரின் அழைப்பின் பேரில் அவருடைய இல்லத்துக்குச் சென்று உரையாற்றினார். ஞானியார் சுவாமிகள் தலைமை வகித்த சென்னை சைவசித்தாந்த சமாஜத்தின் செயலர் பொறுப்பில் இருந்த பூவை கலியாணசுந்தர முதலியார் அதைக் கண்டித்து தன் பதவியை துறந்தார். ஆனால் ஞானியார் சுவாமிகள் சமயப்பிடிவாதம் அறியாமை என்னும் உறுதியுடனிருந்தார்.

ஞானியாரடிகள்

சித்தூர் சுப்ரமணிய பிள்ளையை இசையறிந்தோர் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். இப்போதுகூட யூ.டியுபில் அவருடைய கச்சேரிகள் கிடைக்கின்றன. ஆனால் அவர் அறியப்படும் அச்சாதியைச் சேர்ந்தவரல்ல என்று தெரிந்திருக்காது. மதமாற்றம் போல சாதிமாற்றமும் செய்துகொண்டவர் அவர்

சித்தூர் சுப்ரமணிய பிள்ளை

காவிய வாழ்க்கை என சில வாழ்க்கைகளையே சொல்ல முடியும். வாழும் காலம் முழுக்க, ஒவ்வொரு கணமும், அடுத்த நிமிடம் கிளம்பபோகிறவர்கள் போல செயலாற்றிக் கொண்டே இருப்பவர்கள். சே.ப.நரசிம்மலு நாயுடு அவர்களில் ஒருவர். எத்தனை வாழ்க்கைக் களங்களில் அவர் தமிழகத்திற்கு முன்னோடி என்னும் திகைப்பு எவருக்கும் உருவாகும். இன்றைய தமிழகத்தின் சிற்பிகளில் ஒருவர்

சே.ப.நரசிம்மலு நாயுடு

Monday, September 12, 2022

சுவே

  எம்.ஃபில் இறுதி ஆண்டில் மதுரையில் சுந்தர ராமசாமியக்கு மூன்று நாள் கருத்தரங்கு ஒன்றை பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா, தி.சு. நடராஜன் உதவியுடன் ஏற்பாடு செய்தார். அதில் வண்ணதாசன், ஜெயமோகன், சுரேஷ்குமார இந்திரஜித், நா. ஜெயபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு சுந்தர ராமசாமியின் படைப்புகள் பற்றி பேசினர். சு.வேணுகோபால் தன்னை இலக்கியவாதியாக உணர அந்த நிகழ்ச்சி வழிவகுத்தது.

சு. வேணுகோபால் தன் எழுத்தின் இலக்கிய முன்னோடிகளாக புதுமைப்பித்தன்தி. ஜானகிராமன்கு. அழகிரிசாமிசுந்தர ராமசாமி நால்வரையும் குறிப்பிடுகிறார். தி. ஜானகிராமனை ஆதர்சமாகக் கருதுகிறார். "சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் எழுத்து நடையின் பாதிப்பு என்னிடம் இல்லாவிட்டாலும் அவர்கள் நான் எழுதக் காரணமானவர்கள். நான் எழுத்தாளன் என என்னைக் கர்வம் கொள்ளச் செய்தவர்கள். அந்த வகையில் அவர்கள் என் முன்னோடிகள்" என்கிறார் சு. வேணுகோபால்.

நாவல்editedit source

சு.வேணுகோபால் 1994-ஆம் ஆண்டு ’நுண்வெளி கிரகணங்கள்' என்ற தன் முதல் நாவலை எழுதி முடித்தார். இந்நாவல் சுஜாதா ஏற்பாடு செய்த 1995-ஆம் ஆண்டின் ’குமுதம் ஏர் இந்தியா’ விருதைப் பெற்றது. அதற்குப் பரிசாக அளிக்கப்பட்ட அமெரிக்கப் பயணமும் முக்கியமான அனுபவமாக அமைந்தது. நடுவராக இருந்து நுண்வெளி கிரகணங்கள் நாவலைத் தேர்வு செய்த கோவை ஞானி பின்னாளில் சு. வேணுகோபாலின் குருவாகவும், நண்பராகவும் ஆனார். கோவை ஞானி வழி எஸ்.என். நாகராஜனிடம் சு. வேணுகோபாலுக்கு நட்பு ஏற்பட்டது.

சு.வெணுகோபால்