Friday, July 29, 2022

கி.வாஜ

கி.வா. ஜகந்நாதன் கலைமகளின் ஆசிரியர் பொறுப்பில் 1932 முதல் அவர் மறைவது வரை 53 ஆண்டுகள் இருந்தார். கலைமகளில் மணிக்கொடி எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி கு.ப. ராஜகோபாலன் போன்றவர்கள் தொடர்ந்து எழுதினர். ஈழப்படைப்பாளி இலங்கையர்கோன் போன்றவர்களை கி.வா.ஜகந்நாதன் அறிமுகம் செய்தார். அகிலன், பி.வி.ஆர், ஆர்வி போன்ற அக்காலத்தைய எழுத்தாளர்கள் கலைமகளில்தான் அறிமுகமானார்கள். பின்னர் குடும்ப இதழாக கலைமகள் மாறியபோது ஆர்.சூடாமணிராஜம் கிருஷ்ணன்அநுத்தமா போன்ற பெண் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். கலைமகள் பெண் எழுத்தாளர்களின் ஒரு வரிசையையே உருவாக்கியது. இலக்கியப்படைப்பாளியாகிய அம்பை கூட கலைமகளில் அறிமுகமானவரே. தமிழிலக்கியத்திற்கு கலைமகளின் கொடை முதன்மையானது.கலைமகளில் விடையவன் என்னும் பேரில் அவர் எழுதிய பழந்தமிழிலக்கிய வினாவிடை நெடுங்காலம் தொடர்ந்து வந்தது.

Tuesday, July 26, 2022

கவிமணி

 கிருஷ்ணசாமி ஐயர் (வெங்கடராம கிருஷ்ணசுவாமி ஐயர்) (ஜூன் 15, 1863 - டிசம்பர் 28, 1911) காங்கிரஸ் மிதவாத பிரிவின் தலைவர். வழக்கறிஞர், நீதிபதி. சுவாமி விவேகானந்தருடன் நெருக்கமான தொடர்புள்ளவர். சென்னை சம்ஸ்கிருத கல்லூரி, சென்னை விவேகானந்தர் நினைவில்லம் போன்ற அமைப்புகள் உருவாகக் காரணமாக அமைந்தவர்.

 வி கிருஷ்ணசாமி ஐயர்

நீதிபதி வியர் மாக்கெட் மே 3, 1945 அன்று பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் சிறைசென்றனர். அவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டனர். பிப்ரவரி 1947-ல் அவர்களின் மேல்முறையீட்டை ஏற்ற பிரிவி கௌன்சில் வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றத்துக்கு ஆணையிட்டது. ஏப்ரல் 25, 1947 அன்று நீதிபதி ஹாப்பல் மற்றும் ஷஹபுதீன் ஆகியோர் தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய ஆணையிட்டனர் (லட்சுமிகாந்தன் கொலை வழக்கு )

 நீலகண்ட சாஸ்திரியின் காலகட்டத்தில் இலக்கியங்களை காலவரையறை செய்தல், கல்வெட்டுகளைத் தேடி ஆவணப்படுத்துதல், கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் வாசித்துப் பொருள் கொள்ளுதல், இலக்கியக் குறிப்புகளுடன் பொருத்தி ஆராய்தல் ஆகியவை தொடக்கநிலையில் இருந்தன. கல்வெட்டாய்விலும், இலக்கிய வரலாற்றாய்விலும் ஈடுபட்டிருந்த கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை , கே.என். சிவராஜ பிள்ளை, மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளைமு. அருணாசலம் ஆகியோரின் ஆய்வுகள் கே.ஏ.நீலகண்டசாஸ்திரிக்கு பின்புலமாக அமைந்தன. எஸ். வையாபுரிப் பிள்ளை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியுடன் நேரடி உரையாடலில் இருந்தார். வரலாற்றெழுத்தில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி பிரிட்டிஷ் ஆய்வாளர்களின் செவ்வியல் முறைமையை உறுதியாக கையாண்டவர். தொல்லியல் சான்றுகளை முதன்மையாகக் கொள்ளுதல், புறவயமான சான்றுகளின் அடிப்படையில் தரவுகளால் மட்டுமே வரலாற்றை எழுதுதல் ஆகியவை அவருடைய ஆய்வின் நெறிகள்.

கே.ஏ.நீலகண்ட சஸ்திரி

கவிமணி ஓர் இலக்கிய மையமாகத் திகழ்ந்தார். எஸ். வையாபுரிப் பிள்ளைகே.ஏ. நீலகண்ட சாஸ்திரி , டி.கே.சிதம்பரநாத முதலியார் ,கல்கி , கே.என். சிவராஜ பிள்ளை ஔவை டி.கே.சண்முகம், ப.ஜீவானந்தம் , அ.சீனிவாசராகவன் , பி.ஶ்ரீ.ஆச்சார்யா , மீ.ப. சோமு என அவருடைய நட்புவட்டம் மிகப்பெரியது. கல்வெட்டாய்வு, வரலாற்றாய்வு, இலக்கியம் ஆகிய தளங்களில் அவர் அவர்களுடன் தொடர் உரையாடலில் இருந்தார்.

கவிமணி

Sunday, July 24, 2022

பெயர்கள்

எம். கே. தியாகராஜ பாகவதர் . முத்துவீர ஆசாரி கிருஷ்ணசாமி ஆசாரி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி. (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959). தமிழ் திரையுலகின் முதல் உச்சநட்சத்திரம் என அழைக்கப்படுகிறார். திரைப்பாடகர். கர்நாடக இசையில் பயிற்சி பெற்று இசைநிகழ்ச்சிகள் செய்தவர். நாடகங்களிலும் பஜனைகளிலும் உருவாகி வந்த திறந்த வெளியில் உச்ச ஓசையில் பாடும் முறையை திரைக்கு கொண்டுவந்து புகழ்பெறச் செய்தவர். உச்சநிலையிலும் ஓசைப்பிழை உருவாகாத இவருடைய குரல் வளம் புகழ்பெற்றது.

----------------------------------------------------------
கவிமணி ஓர் இலக்கிய மையமாகத் திகழ்ந்தார். எஸ். வையாபுரிப் பிள்ளைகே.ஏ. நீலகண்ட சாஸ்திரி , டி.கே.சிதம்பரநாத முதலியார் ,கல்கி , கே.என். சிவராஜ பிள்ளை ஔவை டி.கே.சண்முகம், ப.ஜீவானந்தம் , அ.சீனிவாசராகவன் , பி.ஶ்ரீ.ஆச்சார்யா , மீ.ப. சோமு என அவருடைய நட்புவட்டம் மிகப்பெரியது. கல்வெட்டாய்வு, வரலாற்றாய்வு, இலக்கியம் ஆகிய தளங்களில் அவர் அவர்களுடன் தொடர் உரையாடலில் இருந்தார்.
===========================

ந.பழனிவேலு எழுதிய முதல் சிறுகதை ‘பிள்ளையார் கோவில் பிரசாதம்’ 1939-ஆம் ஆண்டு தமிழ் முரசு நாளிதழில் வெளிவந்தது.கல்கி, கி.வா.ஜகந்நாதன், ரா.பி. சேதுப்பிள்ளைவாணிதாசன்  போன்றவர்கள் இவரது ஆதர்ச எழுத்தாளர்கள். சிங்கப்பூர் – மலேசிய நாளிதழ்களாக தமிழ் முரசு, தமிழ் நேசன், தமிழ் மலர் உள்ளிட்ட நாளிதழ்களிலும் மாதவி, இந்தியன் மூவி நியூஸ், கலைமலர் உள்ளிட்ட பல மாத இதழ்களிலும் மற்றும் தமிழக, இலங்கை இதழ்களிலும் எழுதியுள்ளார்.1935 முதல் 1960 வரை கிட்டத்தட்ட 50 சிறுகதைகள் எழுதியுள்ளார்.

Saturday, July 9, 2022

அபி

ப.சிங்காரம் தமிழகத்தில் பள்ளிப்படிப்பு படிக்கையிலேயே மணிக்கொடி, கலைமகள் இதழ்களுக்கு அறிமுகமாகியிருந்தார். அவற்றில் கடிதங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தோனேசியா சென்றபின் அங்கே ஆங்கிலத்தில் நிறைய படிக்கத் தொடங்கினார். அவருடைய பார்வையிலும் நடையிலும் செல்வாக்கு செலுத்தியவர் அமெரிக்க எழுத்தாளரான எர்னஸ்ட் ஹெமிங்வே. இந்தியா திரும்பிய பின் இரண்டு நாவல்களை எழுதினார். அவற்றில் முதல் நாவலான ’கடலுக்கு அப்பால்’ 1959-ல் கலைமகள் பரிசு பெற்று கலைமகள் காரியாலயத்தால் வெளியிடப்பட்டது. இரண்டாம் நாவலான புயலிலே ஒரு தோணி நீண்டநாள் கைப்பிரதியாக இருந்து 1972-ல் கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இரு நாவல்களுமே வெளியிடப்பட்ட காலத்தில் இலக்கியவிமர்சகர்களால் கவனிக்கப்படவில்லை. இவ்விரு நாவல்கள் தவிர அவர் சில கட்டுரைகள், கதைகள் எழுதியதாகவும் அவை கைப்பிரதியிலேயே மறைந்தன என்றும் சொல்லப்படுகிறது.

பசிங்காரம்

-----------

கவிமணியின் முக்கியமான படைப்பாக இன்று கருதப்படுவது நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம். இது தமிழின் முதல் எள்ளல் நூல் என்றும் குமரிமாவட்ட வட்டார வழக்கு இலக்கியத்தின் முன்னோடி நூல் என்றும் கருதப்படுகிறது

கவிமணி

---------------

அன்னம் பதிப்பகம் தொடர்ச்சியாக இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தது. சுப்ரபாரதி மணியன்ஜெயமோகன்கோணங்கிஎஸ். ராமகிருஷ்ணன், சோ. தர்மன் போன்றவர்கள் அவரால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள்.

மீரா

---------

விக்டோரியா நினைவு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர் பள்ளி நாட்களிலேயே வெண்பா எழுதுவதிலும், சங்க இலக்கியம், இலக்கணம் பயில்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயின்றார் (1963). இங்கே அபி பல்கலைக்கழக முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலை பயின்றார் (1966). பின் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எழுத்தாளர் லா.ச. ராவின் நாவல் உத்திகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார் (1981).

Monday, July 4, 2022

thikasi

 தொ.மு.சி.ரகுநாதன், ஆர்.கே.கண்ணன் ஆகியோர் ஏற்கனவே முற்போக்கு இலக்கியத்தை உருவாக்கியிருந்தாலும் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் ஆகியோரே அதன் வளர்ச்சிக்குக் காரணமான எழுத்தாளர்களாக கருதப்பட்டனர். தொ.மு.சி.ரகுநாதனின் சாந்திவ.விஜயபாஸ்கரனின் சரஸ்வதிப. ஜீவானந்தம் தொடங்கிய தாமரை, மற்றும் சமரன் ஆகிய இதழ்களில் ஜெயகாந்தன் தொடர்ச்சியாக எழுதினார்.

ஜெயகாந்தன் தமிழ்விக்கி

+++++++++++

நாட்டம் புத்தகத்தின் பக்கம் திரும்பியது. பள்ளி நாட்களிலேயே திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆறுமுக நாவலர் நூலகம் அறிமுகமானது.

நெல்லை இந்துக் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். அங்கு கு. அருணாசலக் கவுண்டர், ஆ. முத்துசிவன் போன்ற ஆசிரியர்கள் இவரது தமிழார்வத்தைக் கண்டு பாரதி, பாரதிதாசன் படைப்புகள் பக்கம் இவரைத் திருப்பினர். அதேபோல் இவரது ஆங்கிலப் பேராசிரியரான அ.சீனிவாசராகவன் இவருக்கு பல நூல்களை அறிமுகப்படுத்தினார். அவர் வழியாகவே புதுமைப்பித்தனையும் ஒரு கல்லூரி நிகழ்வில் அறிமுகம் செய்துக் கொண்டார்.

தி,க.ச ஜ

பெண்

  லீனா மணிமேகலையின் முதல் படைப்பு ‘ஒற்றையிலையென ’ என்னும் கவிதை தொகுப்பு 2003 ல் வெளியாகியது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ஒளவையார், சூடாமணி, அம்பை, கமலா தாஸ், மஹாஸ்வேதா தேவி என குறிப்பிடுகிறார். பெண்ணிய நோக்கும், இடதுசாரிப்பார்வையும் கொண்டவை லீனாவின் கவிதைகள்.

லீனா மணிமேகலை

====================================

ஞானியாரடிகள் தலைமையில், நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்மொழிய உமாமகேஸ்வரனாருக்குத் "தமிழவேள்' பட்டம் வழங்கப்பட்டது. அவ்விழாவின் இரண்டாம் நாளில் கரந்தைத் தமிழ்க் கல்லூரியை தொடங்க திட்ட அறிவிப்பை உமாமகேஸ்வரனார் வெளியிட்டார். உமாமகேஸ்வரனாரின் முயற்சியால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றத்திலும், கலை மன்றத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்விநிலையம் என்னும் இடம் கிடைத்தது.

தாகூரால் உருவாக்கப்பட்ட சாந்திநிகேதன் போல, தம்மால் உருவாக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கமும் விளங்க வேண்டும் என்று எண்ணினார். அதன் பொருட்டுத் தம் நண்பர் அ. கணபதிப் பிள்ளை என்பவருடன் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். கொல்கத்தா சென்று சாந்திநிகேதனைப் பார்வையிட்டார். காசி இந்துப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார். கரந்தை தமிழ்ச்சங்கம் நூறாண்டு கடந்து இன்றும் தமிழ்க்கல்வி மையமாக திகழ்கிறது.

உமாமேகஸ்வரனார்

======================

’தன் ஸ்வாதீனத்தின்மீது நிர்ப்பந்தத்தை விளைவிக்கும் புறக்காரணிகள் மீது கசப்புணர்வோ அவற்றுக்கு எதிராக வளர்த்தெடுத்துக்கொண்ட வன்மமோ இவர் படைப்புகளில் வெளிப்படுவதில்லை’ என்று க. மோகனரங்கன் மதிப்பிடுகிறார். அம்பையின் செல்வாக்கு உமா மகேஸ்வரியில் உண்டு என்றாலும் அம்பையின் கலையை வெகுவாகத் தாண்டிவந்துவிட்டவர் என ஞாநி சங்கரன் அவரை மதிப்பிடுகிறார்[1]. ‘உமா மகேஸ்வரிதான் எனது தலைமுறையின் பெண் புனைகதையாளர்களில் முதன்மையானவர். அவருடைய கவிதைகளும், மொழியின் அழகும், உணர்வுத்தளமும் சந்திக்கும் அழகிய வரிகளாலானவை. ஆழ்ந்த உணர்ச்சிகரம் கொண்ட படைப்புக்கள் அவருடையவை’ என ஜெயமோகன் மதிப்பிடுகிறார்[2].

உமாஅ மகேஸ்வரி

====================================

அம்பையின் ஆய்வுகள் இரண்டு களங்களைச் சார்ந்தவை . சமூகவியல், இலக்கியம். அம்பை சி. எஸ். லக்ஷ்மி என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு சமூகவியல் கட்டுரைகள் எழுதி வருகிறார். இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலையை பரிவுடன் ஆராய்பவை அம்பையின் கட்டுரைகள். பெண் இசைக்கலைஞர்கள், பெண் நடனக்கலைஞ

அம்பை

------------------------=========================

திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை உருவாக்கிய திருவரங்கம் பிள்ளை அவர்களை 1918-லிருந்து காதலித்து, தந்தையின் சம்மதத்துடன் செப்டம்பர் 2, 1927- ல் திருமயிலை கபாலீஸ்வரர் கோவிலில் மணம் புரிந்துகொண்டார். பின் 1928-ல் பாளையங்கோட்டைக்கு தன் கணவருடன் குடிபெயர்ந்தார். இவர்களுக்கு எட்டு பெண் பிள்ளைகளும், மூன்று ஆண் பிள்ளைகளும் பிறந்தனர்.சுந்தரம்மை, முத்தம்மை, வயிரமுத்து, வேலம்மை, சங்கரியம்மை. பிச்சம்மை, மங்கையர்கரசி, திருநாவுக்கரசு ஆகியோர்.

நீலாம்பிகை

=============================

இவர் எழுதிய வரலாற்று நூல்களில் இந்தியச் சரித்திர மாலை (1938) தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. உழைப்பால் உயர்ந்த ஒருவர் (1952) புத்தர். வாஷிங்டன் என உலகச் சான்றோர்கள் வரலாற்றைக் கூறுவது. பெரியார் மன்றோ (1945) இளைஞர்களுக்காக எழுதிய தனிவரலாற்று நூல். அன்பர் (1955) தனி வரலாற்று நூல். சாகித்ய அகாடமி நிறுவனத்திற்காக சேக்ஸ்பியரின் ஒதல்லோவை மொழிபெயர்த்திருக்கிறார். இதே நிறுவனத்திற்காக தமிழில் சிறந்த சிறுகதைகளை தெரிவுசெய்திருக்கிறார். சிறுகதைக் களஞ்சியம் என்னும் தலைப்பில் வந்த(1959) இந்நூலில் நீண்ட முகவுரை உள்ளது. இத்தொகுதியில் அகிலன்சி.ராஜாகோபாலாச்சாரியார்மாயாவிமீ.ப.சோமுரா.கி.ரங்கராஜன், கி.வா. ஜகன்னாதன் ஆகியோரின். கதைகளுடன் புதுமைப்பித்தன்ந. பிச்சமூர்த்திதி.ஜானகிராமன் ஆகியோரின் கதைகளும் உள்ளன. இதன் இரண்டாவது பகுதி வெளிவரவி 

Friday, July 1, 2022

சயாம் மரணரயில்

 அன்புள்ள ஜெ

கோ.புண்ணியவான் பதிவு வழியாகச் சென்று கையறு வழியாக சயாம் மரண ரயில்பாதை என்ற பதிவை அடைந்தேன். இரவு 12 மணிக்கு படிக்க ஆரம்பித்தேன். அத்தனை ஹைப்பர் லிங்குகளையும் படித்து முடிக்கையில் காலை நான்கரை. கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.

எவ்வளவு பெரிய அழிவு. தமிழர் வரலாற்றின் மாபெரும் அழிவு. ஆனால் அதைப்பற்றி ஒரு பதிவுகூட இல்லாமல் அரைநூற்றாண்டை தமிழகம் தாண்டிவந்துவிட்டது என்று படித்தபோது, இன்றுகூட ஒரு நினைவுச்சின்னம் இல்லை என்று தெரிந்துகொண்டபோது கண்ணீர் கோத்துக்கொண்டது.

அங்குமிங்கும் மேலோட்டமான பதிவுகளை நானும் கண்டதுண்டு. சயாம் மரணரயில் நாவலைக்கூட படித்திருக்கிறேன். இந்தப் பதிவு வெறுந்தகவல்கள் வழியாகவே நாவல்களை விட உக்கிரமான சித்திரத்தை அளிக்கிறது. எவ்வளவு லிங்குகள். அந்த பேரழிவை வரைந்த ஓவியர்கள். அவர்களின் பிற்கால வாழ்க்கை. அந்த பேரழிவை நிகழ்த்திய ஜப்பானிய ஜெனரல்கள். அதைப்பற்றி எழுதிய எழுத்தாளர்கள்....ஜாக் சாக்கர் ஓவியர் ,பிலிப் மெனின்ஸ்கி ,ஜான் மென்னி ,ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட், ரொனால்ட் சியர்ல், ஜான் கோஸ்ட் ,ஏர்னஸ்ட் கோர்டான், ஹிரோஷி ஆபே ,எகுமா இஷிடா   

பிரம்மாண்டமான ஒரு வரலாறு. முழுமையாக பதிவாகியிருக்கிறது அது. அண்மையில் இதற்கிணையான ஒரு நூலைக்கூட படித்ததில்லை

சயாம் மரண ரயில்பாதை 

ஜாக் சாக்கர் ஓவியர் 

பிலிப் மெனின்ஸ்கி 

ஜான் மென்னி 

ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட்

ரொனால்ட் சியர்ல்

ஜான் கோஸ்ட்

ஏர்னஸ்ட் கோர்டான்

ஹிரோஷி ஆபே

எகுமா இஷிடா 

சயாம் மரணரயில்

சயாம்