Wednesday, August 31, 2022

அளவெட்டி

  ஞானியார் சுவாமிகளின் இரு இயல்புகளை திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் தன் தன்வரலாற்றில் குறிப்பிடுவதை வல்லிக்கண்ணன் மேற்கோளாகச் சுட்டுகிறார். ஞானியார் சுவாமிகள் தன் 16-ஆவது வயதில் துறவு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அப்போது தன் ஆசிரியருக்கு வாக்களித்ததன்படி மடத்தின் தலைவருக்குரிய நோன்புகளில் சமரசம் செய்துகொள்ளவே இல்லை. தன் வாழ்நாள் முழுக்க மேனா என்னும் மூடிய பல்லக்கிலேயே பயணம் செய்தார். திரு.வி.க உள்ளிட்ட பலர் வற்புறுத்தியும் அவர் காரில் ஏறவில்லை. அவரை 1941-ல் இராமசாமி நாயுடு என்னும் அன்பர் தென்னாப்ரிக்காவுக்கு அழைத்தபோது தன் நோன்புகளுக்கு கடல்கடத்தல் எதிரானது என மறுத்துவிட்டார். ஆனால் குடை, கொடி, தீவட்டி, சாமரம் போன்ற பழங்கால வழக்கங்களை ஆடம்பரமானவை என தவிர்த்துவிட்டார்.

ஞானியார் அடிகள் வீரசைவத்தின் உறுதியான சைவப்பற்றை மதவெறியாக ஆக்கிக் கொள்ளவில்லை. வைணவர் இல்லங்களில் ஆண்டாள் வரலாறு உள்ளிட்ட சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கிறார். புதுச்சேரியில் சின்னையா ஞானப்பிரகாச முதலியார் என்னும் கிறிஸ்தவ அன்பரின் அழைப்பின் பேரில் அவருடைய இல்லத்துக்குச் சென்று உரையாற்றினார். ஞானியார் சுவாமிகள் தலைமை வகித்த சென்னை சைவசித்தாந்த சமாஜத்தின் செயலர் பொறுப்பில் இருந்த பூவை கலியாணசுந்தர முதலியார் அதைக் கண்டித்து தன் பதவியை துறந்தார். ஆனால் ஞானியார் சுவாமிகள் சமயப்பிடிவாதம் அறியாமை என்னும் உறுதியுடனிருந்தார்.

ஞானியார் அடிகள்

வட்டுக்கோட்டை குருமடம் அமெரிக்க இலங்கை மிஷன் அமைப்பால் (American Board of Commissioners for Foreign Missions - ABCFM) யாழ்ப்பாணம் குடாநாட்டில் வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் ஜூலை 2, 1823- ல் தொடங்கப்பட்டது. மதப்பரப்புநரும் மருத்துவருமான ஜான் ஸ்கட்டர் (John Scudder, Sr) அவர்களின் அமைப்புக்கு துணையமைப்பாக இது ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்காவில் இருந்து கிறிஸ்தவர்கள் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு பத்து டாலர் வீதம் அனுப்ப ஒப்புக்கொண்டு 200 பேர் பணம் அனுப்பினர். அதன் அடிப்படையில் இந்த குருமடம் உருவாக்கப்பட்டது. வெவ்வேறு மிஷன் பள்ளிகளில் படித்த 120 மாணவர்களில் சிறந்த 40 பேர் இதில் சேர்க்கப்பட்டார்கள்.வட்டுக்கோட்டை குருமடத்துடன் தொடர்புடைய புகழ்பெற்ற ஆளுமைகள்



jk

  1949-ல் ஜெயகாந்தன் டிரெடில் என்னும் முதல் கதையை எழுதினார். ஆனால் முதலில் பிரசுரமானது ஆணும் பெண்ணும் என்னும் சிறுகதை. இக்கதை 1953-ல் சௌபாக்யம் இதழில் வெளியானது. இடதுசாரி அறிஞர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், ஆர்.கே.கண்ணன் ஆகியோரின் ஊக்குவித்தலால் இடதுசாரி இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார். தொ.மு.சி. ரகுநாதன், ஆர்.கே.கண்ணன் ஆகியோர் ஏற்கனவே முற்போக்கு இலக்கியத்தை உருவாக்கியிருந்தாலும் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமிஜி. நாகராஜன் ஆகியோரே அதன் வளர்ச்சிக்குக் காரணமான எழுத்தாளர்களாக கருதப்பட்டனர்.

தொ.மு.சி.ரகுநாதனின் சாந்திவ.விஜயபாஸ்கரனின் சரஸ்வதிப. ஜீவானந்தம் தொடங்கிய தாமரை, மற்றும் சமரன் ஆகிய இதழ்களில் ஜெயகாந்தன் தொடர்ச்சியாக எழுதினார். பொதுவான இலக்கிய இதழ்களான பிரசண்ட விகடன்கிராம ஊழியன் ஆகிய இதழ்களிலும் ஜெயகாந்தன் அவ்வப்போது எழுதினார். இக்காலகட்டத்தில் அவருடைய அணுக்கமான இலக்கியத்தோழராக கவிஞர் தமிழ்ஒளி இருந்தார். கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலத்துடனும் நெருக்கம் இருந்தது. ஆனால் அக்காலத்தில் இருந்த மணிக்கொடி இலக்கியக் குழுவினருடன் அவருக்கு அறிமுகமோ நெருக்கமோ இருக்கவில்லை.

jeyakanthan 

கு.அழகிரிசாமிக்கு மரபிசையில் ஆர்வமும் பயிற்சியும் இருந்தது. அவருடைய ஊரில் மணம் புரிந்திருந்த நாதஸ்வரக் கலைஞர் காருக்குறிச்சி அருணாசலம் அங்கு வரும்போதெல்லாம் உடனிருந்து இசைகேட்டார். இசையறிஞர் விளாத்திக்குளம் சுவாமிகள் பாடுவதை கேட்க தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தார். தமிழில் இசைப்பாடல்களை எழுதுவது, வழக்கொழிந்துபோன இசைப்பாடல்களை தேடித் தொகுப்பது ஆகியவற்றில் ஈடுபட்டதை அவருடைய கடிதங்கள் காட்டுகின்றன. அவர் மலேசியாவில் இருந்தபோது எட்டயபுரம் கடிகை நமசிவாயப் புலவர் இயற்றிய 'வல்லீ பரதம்’ 'முக்கூடற்பள்ளு' ஆகிய இசைநாடகங்களை தயாரித்தார். தியாகராஜர், பாரதியார், கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை போன்றோரின் பாடல்கள் சிலவற்றை ஸ்வரப்படுத்தியிருக்கிறார். அண்ணாமலை ரெட்டியார்ரின் 'காவடிச்சிந்தையும்’ பதிப்பித்தார்.

கு. அழகிரிசாமி

அ.குமாரசுவாமிப் புலவர்   


கம்பதாசன்

அன்புள்ள ஜெ

கம்பதாசன் பற்றிய விக்கி பதிவு அருமையானது. ஒரு கலைக்களஞ்சியத்தை இப்படி ஆர்வமூட்டும்படி படிக்கலாம் என்பதே திகைப்பூட்டுகிறது. அதிலும் அவர் வாழ்க்கை ஒரு காவியநாயகனின் வாழ்க்கை. (எத்தனை பெண்கள்) கம்பதாசன் என்ற பெயரே தகும். கம்பனைப்போலவே வாழ்ந்திருக்கிறார்.

சிபில் கார்த்திகேசு

Wednesday, August 24, 2022

பட்டியல்

  இவ்வாண்டு பட்டியலில் அரிசங்கர்றாம் சந்தோஷ் , சுரேஷ் பிரதீப், வேல்முருகன் இளங்கோ, கார்த்திக் புகழேந்தி ஆகியோரே இலக்கியத் தகுதி கொண்டவர்கள். விருதுபெற்றிருக்கும் பி.காளிமுத்து கவிதைகளை இனிமேல்தான் எழுதவேண்டும். அதற்கு முன் அவர் தமிழில் எழுதப்பட்ட புதுக்கவிதைகளை வாசிக்கவேண்டும். கவிதை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும். எதிர்காலத்தில் அவ்வண்ணம் நிகழுமென்றால் நன்று.

Tuesday, August 23, 2022

கேஎன்

  திருவனந்தபுரம் புத்தம்சந்தையில் உள்ள சைவப்பிரகாச சபையில் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளைஎஸ். வையாபுரிப் பிள்ளை உள்ளிட்ட அறிஞர்கள் கூடி விவாதித்துவந்தனர். கே.என்.சிவராஜ பிள்ளையும் அவ்விவாதங்களில் ஈடுபட்டார். திருவனந்தபுரத்தில் இருந்த இலக்கியக் கழகம் என்னும் அமைப்பு சார்பில் பொதுவிவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ராஜாஜி தலைமையில் Trivandrum Literary Club அரங்கில் இலக்கியக் கழகம் சார்பில் நிகழ்ந்த ஒரு பொதுவிவாதத்தில் கே.என்.சிவராஜ பிள்ளை வர்ணாசிரம முறை இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை என்று பேச வர்ணாசிரமத்தை ஆதரித்து சுப்ரமணிய ஐயர் எம்.ஏ பேசினார். இவ்விவாதங்களை தொகுத்து கே.என்.சிவராஜ பிள்ளை Indian Social idol Review என்ற பேரில் 200 பக்க நூலாக வெளியிட்டார். வர்ணாசிரம தர்மம் ஆரியர்களால் திராவிடர்கள் மேல் சுமத்தப்பட்டது என்று அதில் கே.என்.சிவராஜ பிள்ளை வாதிட்டார். சடங்குகளுக்கும் சாதிகளுக்கும் பிரிக்கமுடியாத உறவுள்ளது என்று கூறினார். பின்னாளில் திராவிட இயக்கத்தவர் இந்நூலின் கருத்துக்களை விரிவாக எடுத்தாண்டனர். திருவனந்தபுரம் சமூக உரிமைக் கழகம் என்ற அமைப்பில் முதல் மாநாட்டில் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு சிறுபிரசுரமாக வந்திருக்கிறது.

சென்னைப் பல்கலைக்கழக வெளியீடான Agastya in the Tamil land (1930) என்னும் ஆங்கில நூலில் Early History of Decah (Bhahdagar), History of Ancient Sanskrit Literature (Maxmuller), The Great Epic of India (Hopkins) ஆகிய மூன்று நூல்களின் அடிப்படையில் அகத்தியரை கே.என்.சிவராஜ பிள்ளை ஆராய்ந்தார். அகத்தியரை இராமாயண, ரிக்வேத நூல்களின்படி பார்ப்பது வழக்கம். அகத்தியர் குறித்த தொன்மம் கம்போடியா, இந்தோனேஷியா தீவுகளில் உண்டு. பெரும்பாலும் இவை கற்பனையின் அடிப்படையில் உருவானவை. தொல்காப்பியர் அகத்தியரைக் குறிக்கவில்லை. காரிக்கண்ணனார் ஆலத்தூர் கிழார், தாமப்பல் கண்ணனார் போன்ற புலவர்களின் பாடல்களின் அடிப்படையில் அகத்தியரைப் பார்ப்பனர் என்று முடிவு செய்துள்ளனர். எனவே அகத்தியர் குறித்த பழைய தொன்மத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என்கிறார். (பார்க்க தமிழகத்தில் அகத்தியர் )

கே.என்.சிவராஜ பிள்ளை

======================

பாரதி இந்தியா இதழின் பொறுப்பை ஏற்றதும் பத்திரிகையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக அதன் தலையங்கம் எழுதுவதில் தனி நடை உருவாகியது. இதனை இந்தியாவின் பிற்கால இதழ்களான அமிர்தகுண போதினி (நவம்பர் 1928), விவேகபாநு, ரங்கூன் சுதேச பரிபாலினி, இந்து சாதனம், சுதேசமித்திரன் போன்ற இதழ்கள் பாராட்டியதன் மூலம் அறிய முடிகிறது.

இந்தியா 

======

கே.முத்தையா தீக்கதிர் வார இணைப்பு, செம்மலர் இதழ்களில் தொடர்ச்சியாக இலக்கிய விமர்சனக்குறிப்புகளும் கதைகளும் எழுதினார். சோஷலிச யதார்த்தவாத அழகியலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த கே.முத்தையா தமிழ் மரபிலக்கியங்களை அந்த அடிப்படையில் ஆராய்ந்தார். சோஷலிச யதார்த்தவாத அடிப்படையில் நாவல்களை எழுதினார். உலைக்களம், விளைநிலம் என்னும் இருநாவல்களும் குறிப்பிடத்தக்கவை. சோஷலிச யதார்த்தவாத அழகியலை ஏற்று எழுதும் டி.செல்வராஜ்,

கே. முத்தையா


Thursday, August 18, 2022

புதியவை

  ராமானுஜம் கல்லூரியில் படிக்கும் போது அவருக்கு மாமிச உணவு மற்றும் போதைப்பொருட்களின் பழக்கம் ஏற்பட்டது. இதை அவரது ஆச்சாரமான குடும்பத்தினரால் சகித்துக் கொள்ள முடியாததால் பிரச்சினை ஏற்பட்டது. அதன் பிறகு ராமானுஜம் வீட்டிற்கு செல்வதை நிறுத்திவிட்டு கல்லூரியிலும் பிறகு சோழமண்டலத்திலும் தங்க ஆரம்பித்தார். ராமானுஜத்தின் திக்குவாய், தோற்றம், நடவடிக்கைகள் நண்பர்கள் மத்தியிலும் கேலிப் பொருளானது. ஓவியப் பள்ளி முதல்வர் கே. சி. எஸ். பணிக்கர், ஆசிரியர்களான தனபால்கிருஷ்ணாராவ்சந்தானராஜ், சக மாணவர்களான கே.எம்.ஆதிமூலம்பி. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் ராமானுஜத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளனர். ராமானுஜத்தின் பல படைப்புகளுக்கு பணிக்கர் தான் தலைப்பு வழங்கியுள்ளார். ராமானுஜம் தன் படைப்புகளை தமிழில் சொல்ல அதற்கு பொருத்தமான தலைப்பை பணிக்கர் ஆங்கிலத்தில் கவித்துவமாகக் கொடுத்துள்ளார்.

கே.ராமானுஜம் https://tamil.wiki/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D

-----------------

குலாம் காதிறு நாவலர் எழுத்துச்சுவடி, எண்சுவடி, திவாகரம், பிங்கலம், நிகண்டு ஆகியவைகளை திண்ணைப் பள்ளிகளில் கற்றுத்தேர்ந்தார். பன்னிரெண்டாவது வயதில் நாகூரில் வாழ்ந்த தமிழ் ஆசிரியர் நாராயண சுவாமியிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். இவரது இருபத்தி எட்டாம் வயதில் நாராயண சுவாமி இறந்துவிட்டதால் மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ்ப் படிப்பைத் தொடர்ந்தார். அதன் பின் தந்தையின் நண்பரும் வழக்கறிஞருமான சரவணப் பெருமாள் ஐயரிடம் ஆங்கில மொழியைக் கற்றார்.

குலாம் காதிறு நாவலர் பத்தொன்பது கவிதை நூல்கள், ஏழு உரைநடை நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள், இரண்டு இலக்கண நூல்கள் எழுதியுள்ளார். காப்பியங்கள், கலம்பகம், கோவைகள், அந்தாதிகள், மாலைகள், உரைநூல்கள் என பல இலக்கிய வகைகளில் எழுதியுள்ளார். நாகூர் நாயகத்தின் வரலாற்றை முதல் முதலில் நூலாகக் கொண்டு வந்தார். குலாம் காதிறு நாவலர் செல்வந்தர் பெ.மா.மதுரைப் பிள்ளையை வாழ்த்தி மதுரைக்கோவை நூலைப் படைத்தார்.

குலாம் காதிறு நாவலர்

தன் சொந்த கிராமத்தில் தொடக்க கல்வி கற்ற பிறகு, இவரது தாய்வழி பாட்டனார் ஆங்கிலேயப் பணியில் இருந்தமையால் வேதநாயகம் பிள்ளைக்கு ஆங்கிலக் கல்வி அளிக்க பெற்றோர் முடிவெடுத்து அவரைத் திருச்சிராப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். அங்கே ஆங்கில இலக்கியப் படைப்புகளுக்கும் கட்டுரைகளுக்கும் அவருக்கு அறிமுகம் உண்டானதால், அது போன்ற படைப்புகளைத் தமிழில் எழுதவேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. அதுவே பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நாவலை எழுத அவருக்குத் தூண்டுகோலாயிற்று.

மாயூரன் வேதநாயகம்

உதயணன்

-------------------

இலக்கியக் காலகட்டம், புராணகாலகட்டம், சிற்றிலக்கியக் காலகட்டம், நவீன இலக்கியக் காலகட்டம் என்று பொதுவாகப் பிரிப்பதுண்டு. சிற்றிலக்கியக் காலகட்டத்தில் திட்டவட்டமான வடிவ இலக்கணம் கொண்ட கலம்பகம்பிள்ளைத்தமிழ் போன்ற சிற்றிலக்கியங்கள் மிகுதியாக வெளிவந்தன. அதற்கு முந்தைய புராணகாலகட்டத்தின் தொடர்ச்சியாக புராணங்களும் இயற்றப்பட்டன. அன்று உரைநடை இலக்கியம் உருவாகவில்லை. நூல்களுக்கான விளக்கக்குறிப்புகள் மட்டுமே உரைநடையில் எழுதப்பட்டன.


Wednesday, August 17, 2022

thalaippukaL

 அன்புள்ள சங்கரன் அவர்களுக்கு

நல்ல விஷயம்தான். இன்று சம்ஸ்கிருத மொழிக்கு ஓர் அறிவுத்தள இணைப்புமொழி என்ற நிலை இல்லை என்றாலும் அதில் ஓர் அறிவியக்கம் உள்ளது. தமிழின் ஒரு புகழ்பெற்ற ஆக்கம் அங்கே செல்வது நல்லதுதானே
ஜெ
-----------------------

பர்ட்டன் ஸ்டெயின்

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

குடவாயில் பாலசுப்ரமணியம் 

அன்புள்ள ஜெ

பொன்னியின் செல்வன் பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன, கவனித்திருப்பீர்கள். சோழர் காலம் ஒன்றும் பொற்காலம் அல்ல என்று ஆங்கிலத்தில் (கடுமையான தமிழ்வெறுப்புடன்) எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இங்கும் அதை பலர் எழுதுகிறார்கள். சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட கிராமங்களின் பட்டியலை போட்டு ஒருவர் ‘இதில் ஒருவராவது வேறு சாதி உள்ளனரா?’ என்று கேட்டிருந்தார். இரு சாராரும் ஒரே குரலில் பேசுவதுதான் ஆச்சரியமாக உள்ளது

சக்தி

பொன்னியின் செல்வன் நாவல் 

யவனராணி- சாண்டில்யன்

உடையார் -பாலகுமாரன்

அன்புள்ள சக்தி,

சோழர் காலத்தை ஏன் பொற்காலம் என்று சொல்லலாம் என விரிவாக எழுதிவிட்டேன். அது இன்றைய காலகட்டத்தை விட மேலானது என்னும் பொருளில் அல்ல. இன்றையகாலமே வரலாற்றின் பொற்காலம். பொற்காலங்கள் வருங்காலத்திலேயே இன்னும் உள்ளன. சென்றகாலங்களில் பொற்காலங்களை தேடுவதில் எனக்கு உடன்பாடில்லை. சென்றகாலம் பொற்காலம் என்றால் சிந்தனையாளர்களின் பங்களிப்பு என ஒன்றுமே இல்லை என பொருள்படுகிறது.