Thursday, June 30, 2022

பெயர்கள்

  To read the article in English: Aram. ‎



அறம்: தமிழில் உள்ள ஒரு கலைச்சொல். சம்ஸ்கிருதத்தில் தர்மம், பிராகிருதத்திலும் பாலியிலும் தம்மம் ஆகிய சொற்களுக்கு ஏறத்தாழ இணையானது என்றாலும் தமிழுக்கே உரிய மேலதிக பொருள் கொண்டது. வெவ்வேறு காலகட்டங்களில் பொருளேற்றம் கொண்டு மாறிவந்தது. அறம் என்னும் சொல் பொதுவாக வாழ்க்கைநெறி, நீதி, விழுமியம், ஒழுக்கம், கொடை, நோன்பு ஆகியவற்றையும் வாழ்க்கையை இயக்கும் ஒட்டுமொத்த பிரபஞ்ச ஒழுங்கையும் சுட்டுவதாக தமிழில் கையாளப்படுகிறது. அறம்பாடுதல் என்றால் அறத்தை சான்றுக்கு அழைத்து சாபம் போடுதலாக பழங்காலத்தில் ஒரு மரபாக இருந்தது.


அறம்




===============


To read the article in English: Abraham Pandithar. ‎



தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

ஆபிரகாம் பண்டிதர் (ஆகஸ்ட் 2, 1859 - ஆகஸ்ட் 31, 1919) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர். தமிழிசை இயக்கத்தின் முன்னோடி. இசை ஆய்வாளர், தமிழறிஞர். சித்த மருத்துவராகவும் தமிழ் கிறித்தவ கவிஞராகவும் இருந்தார். கர்ணாமிர்த சாகரம் என்னும் பெருநூல் வழியாக தொல்தமிழ் இசையின் பண் அமைப்பு முறையை கணிதரீதியாக விளக்கினார். பண் முறையே ராகங்களாகியது என்றும் அதுவே கர்நாடக சங்கீதத்தின் அடிப்ப்படையாகவும், இந்துஸ்தானி இசையின் ராகமுறையாகவும் அமைந்தது என்றார்.


ஆபிரகாம் பணிட்தர்


-------------------------


சைவ சமயம் தொடர்பாக உண்மைநெறி விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை என்னும் தலைப்பில் தமிழிலும், 1897இல் Light of Truth or Siddhanta Deepika என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும் பத்திரிகைகளை வெளியிட்டார். இவ்விதழில் பூவை கலியாணசுந்தர முதலியார் ஆசிரியராக இருந்தார். பின்னாளில் மறைமலையடிகள் இவ்விதழில் ஆசிரியராக இருந்தார்.


ஜே.எம் நல்லுசாமி


------------------------------------------


தமிழ்த்தேசியப் பார்வை காலகட்டம் (1998-2020)editedit source

1992-ல் சோவியத் ருஷ்யாவின் உடைவுக்குப்பின் ஞானியின் அரசியல் பார்வையில் பெரும் மாற்றம் உருவானது. மார்க்சிய விடுதலை என்பது தேசிய இனங்களின் விடுதலையின் வழியாகவே அடையப்பட முடியும் என்னும் எண்ணத்தை அடைந்தார். ஆகவே தமிழியக்கச் சிந்தனைகளுக்கு அணுக்கமானவரானார். தமிழ்நேயம் என்னும் சிற்றிதழை வெளியிட்டார். தமிழியக்கம், பெரியாரியம், ஆகியவற்றை மார்க்ஸியப்பார்வையுடன் இணைக்கமுயன்றார்


இதழியல்editedit source

ஞானி 1968 முதல் தொடர்ச்சியாக அரசியல் மற்றும் இலக்கியச் சிற்றிதழ்களை நடத்தி வந்தார்.ஞானி நடத்திய சிற்றிதழ்கள்


)

வானம்பாடி (1971-1982)

பரிமாணம் (1979-1983)

நிகழ் (1988-1996)

தமிழ்நேயம் (1998-2012)

ஞானி

===============================


1885-ஆம் ஆண்டு காளியம்மாளை மணம் புரிந்தார். சிறிதுகாலம் வேளாண்மைத்தொழில் செய்தார். 1890 முதல் 1902 வரை மதுரை சிம்மக்கல் சேதுபதி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். தலைமை ஆசிரியர் நாராயண ஐயர் தமிழ்ப்பாடத்திற்கான பாடவேலையை குறைத்ததால் தன் பணியைத் துறந்தவர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட சேதுபதி செந்தமிழ் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்து 1906 வரை பணியாற்றினார். எப்போதும் நோயும் வறுமையும் கொண்டிருந்தார். பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாருக்கு தொல்காப்பியம் கற்பித்த ஆசிரியர் இவர். பண்டிதமணி இவருக்கு பொருளுதவி செய்திருக்கிறார்.


அரசன் சண்முகனார்


=====================


நான்காம் தமிழ்ச்சங்கம் மதுரைeditedit source

செப்டம்பர் 4, 1901 அன்று, பாலவநத்தம் நிலக்கிழார் பாண்டித்துரைத் தேவர் முயற்சியால் பாஸ்கர சேதுபதியின் ஆதரவோடு, மதுரைத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. அதன் நூற்பதிப்பு, ஆராய்ச்சி ஆகிய துறைகளின் தலைவராக ரா.ராகவையங்கார் பொறுப்பேற்றார். அப்பொழுது பல இடங்களுக்கும் சென்று பழஞ்சுவடிகளைத் திரட்டினார். அவற்றை மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பாண்டியன் நூலகத்தில் தொகுத்து வைத்தார். ராகாவையா




===========================




இருந்த முத்துசாமி அய்யங்கார் தன் மகனுக்கு 16 ஆண்டுகள் தமிழ் கற்பித்தார். இவர் 1894-ல் காலமானார். வி.கனகசபைப் பிள்ளையிடம் தமிழை சிறுவயதில் கற்ற இராகவையங்காருக்கு உதவியாக இருந்தவர் அவரது மாமனான ரா. ராகவையங்கார். பின்னர் சேதுபதி ஆதரவில் வாழ்ந்தார். பாண்டித்துரைத் தேவர், நாராயணையங்கார் ஆகியோர் இவருடன் கல்விபயின்றவர்கள். ’செந்தமிழ் வளர்த்த தேவர்கள்’[1] என்ற பெயரில் பொன்னுச்சாமித் தேவர், பாண்டித்துரைத் தேவர் ஆகியோரின் வாழ்க்கையை எழுதியிருக்கிறார் 


 


No comments:

Post a Comment