Monday, June 6, 2022

மேலும்

கே. ராமானுஜம் (1940 - ஜூன் 3, 1973) தமிழ்நாட்டின் நவீன ஓவியக் கலைஞர்களில் ஒருவர். விசித்திரமும் கனவுலகும் கொண்ட ஓவியங்களைப் படைத்தவர். இந்த விசித்திரப் படைப்புலகம் கே.ராமானுஜத்தை மற்ற கலைஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பித்தது. தான் வாழ்ந்த குறுகிய காலத்தில் ஓவியத்தில் மேதைமையை வெளிப்படுத்தியவர். இயல்பில் திக்குவாயுடன் தொடர்புறுத்தல் சிக்கல் மற்றும் மனநிலைக் குறைபாடு கொண்டவராக இருந்தார். அவர் தனக்காக உருவாக்கிய கனவுலகம் அவர் படைப்புகளில் தனித்தன்மையுடன் வெளிப்பட்டது. கே ராமானுஜம் வில்லியம் மில்லர் (William Miller) (ஜனவரி 13, 1838 – ஜுலை 1923) கல்வியாளர், மதப்பிரச்சாரகர், தமிழ்நாட்டில் நவீனக்கல்விக்கும் நவீன இலக்கியத்திற்கும் அடித்தளம் அமைத்த முன்னோடிகளில் ஒருவர். நவீனத் தமிழ் ஆய்வின் தொடக்கப்புள்ளியும் கூட. ஸ்காட்லாந்துக்காரரான வில்லியம் மில்லர் ஃப்ரீ சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்து (Free Church of Scotland) அமைப்பின் பிரச்சாரகர். மதராஸ் மாகாணச் சட்டச்சபையில் 1893, 1895, 1899 மற்றும் 1902-ல் நான்குமுறை உறுப்பினராக இருந்தார். வில்லியம் மில்லர் இங்கிலாந்து மன்னர் வழங்கிய கைசர் இ ஹிந்த் விருதைப் பெற்றவர். மில்லர் மீ.ப.சோமு (ஜூன் 17, 1921 - ஜனவரி 15, 1999) தமிழ் எழுத்தாளர். நாவல்களும் சிறுகதைகளும் மரபுக்கவிதைகளும் எழுதியவர். பண்ணிசை ஆராய்ச்சியாளர். இதழாளர். வானொலி நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணியாற்றினார். மீ ப சோமு மு.வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) (மு.வ./மு.வரதராசனார்) தமிழ் எழுத்தாளர், பழந்தமிழ் நூல்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர், கல்வியாளர். தமிழகத்தின் புகழ்பெற்ற திருக்குறள் உரை மு.வரதராசன் எழுதியது. கல்வியாளராகத் தன் மாணவர்களிடம் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தியவராகத் திகழ்ந்தார். வரதராசனார் அ.மாதவையா போன்ற ஒருவரை கலைக்களஞ்சியத்தில் பதிவுசெய்யும்போது உருவாகும் சிக்கல்களில் முதன்மையானது வெவ்வேறு ஆய்வாளர்கள் வெவ்வேறு வகையாக அவரை விவரிப்பதை பதிவுசெய்வதுதான். அவருடைய பெயர் முதற்கொண்டு விவாதங்கள் உள்ளன. ஆகவே எல்லா விவாதங்களையும் பதிவுசெய்வதையே இப்போது கலைக்களஞ்சியங்கள் செய்ய முடியும். எதிர்காலத்தில் உறுதிப்பாடு உருவானால்கூட இவ்வாறு விவாதம் நிகழ்ந்தது என்பதே ஒரு பண்பாட்டுப் பதிவுதான் அ. மாதவையா ரா.கி.ரங்கராஜன் (அக்டோபர் 5, 1927 - ஆகஸ்ட் 18, 2012) தமிழில் பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதிய எழுத்தாளர். குமுதம் இதழில் உதவியாசிரியராக பணியாற்றிய இதழாளர். ஹென்றி ஷாரியரின் பட்டாம்பூச்சி முதலிய நாவல்களை தமிழாக்கம் செய்த மொழிபெயர்ப்பாளர். ரா கி ரங்கராஜன் ஜெயகாந்தன் (த. ஜெயகாந்தன்) (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 8, 2015) தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியிலும் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸிலும் ஒத்திசைந்து பணியாற்றியவர். ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் தமிழகத்தின் இடதுசாரி தரப்பின் அறக்குரலாகவும், இடதுசாரிப்பார்வையின் மெய்யியலை தேடியவராகவும் மதிப்பிடப்படுகிறார். ஜெயகாந்தன் (த. ஜெயகாந்தன்) (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 8, 2015) தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியிலும் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸிலும் ஒத்திசைந்து பணியாற்றியவர். ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் தமிழகத்தின் இடதுசாரி தரப்பின் அறக்குரலாகவும், இடதுசாரிப்பார்வையின் மெய்யியலை தேடியவராகவும் மதிப்பிடப்படுகிறார். ஜெயகாந்தன்

No comments:

Post a Comment