Sunday, June 26, 2022

புதியவை

  லா.ச.ராமாமிர்தம் (லா.ச.ரா) (லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்) (அக்டோபர் 30, 1916 - அக்டோபர் 30, 2007) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர். நனவோடை முறையில் சொல்விளையாட்டுக்களுடனும் நுண்ணிய பண்பாட்டுக் குறிப்புகளுடனும் எழுதப்பட்ட இவருடைய நடை புகழ்பெற்றது. உணர்ச்சிக்கொந்தளிப்பும் நுண்ணிய விவரணைகளும் இந்து மதமரபின் படிமங்களும் கலந்த கதைகள் இவருடையவை. இசையனுபவமும் மறைஞான அனுபவமும் அவற்றில் வெளிப்படுகின்றன

லா.ச.ராமாமிர்தம்

==================================

தஞ்சை பிரகாஷ் (ஜி. எம். எல். பிரகாஷ்) (1943 - பிப்ரவரி 27, 2000) தமிழில் நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிய எழுத்தாளர். இலக்கியச் செயல்பாட்டாளர். பதிப்பாளர். தஞ்சையில் கதைசொல்லி என்னும் அமைப்பை நடத்தியவர். தமிழில் பாலியல் மீறல்களை பொதுவான எல்லைகளை மீறிச்சென்று எழுதியவர். ஆகவே ஒருசாராரால் தமிழிலக்கியத்தில் அந்தத்தளத்தில் முன்னோடி என கருதப்படுபவர்.

ஞ்சை பிரகாஷ்

---------------------------

சாரு நிவேதிதா (18 டிசம்பர் 1953) தமிழ் எழுத்தாளர். தமிழில் பின்நவீனத்துவ - பின் அமைப்பியல் சார்ந்த அழகியலைக் கொண்ட எழுத்தாளர்களில் முதன்மையானவராகவும், பிறழ்வெழுத்து என்னும் இலக்கியவகைமையின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். பலதுறைசெய்திகளை இணைத்து எழுதும் கலைக்களஞ்சியத்தன்மை, எழுத்தைப்பற்றியே எழுதும் மீபுனைவுத்தன்மை, அனைத்தையும் விளையாட்டாக ஆக்கும் தன்மை, ஒழுக்கவியல் எல்லைகளையும் அரசியல் சரிநிலைகளையும் மீறிச்செல்லும் தன்மை, அமைப்புகளுக்கு எதிரான கலகத்தன்மை ஆகியவற்றைக் கொண்ட எழுத்துக்களை எழுதியவராக அறியப்படுகிறார்.

சாரு நிவேதிதா

==========================

சாண்டில்யன் (ஆர். பாஷ்யம் ஐயங்கார்) (நவம்பர் 10, 1910 - செப்டம்பர் 11, 1987) தமிழில் வரலாற்றுப் பின்புலம் கொண்ட சாகச நாவல்களை எழுதிய எழுத்தாளர். வால்டர் ஸ்காட்[1], சார்லஸ் கிங்ஸ்லி[2] ஆகியோருடைய தாக்கத்துடன் அரண்மனைச் சதிகளும் கடற்பயண விவரணைகளும் கொண்ட நாவல்களை எழுதினார். குமுதம் இதழில் தொடராக வெளிவந்த இவருடைய நாவல்கள் பெரும் புகழ் பெற்றவை.

சாண்டில்யன்

----------------------

சூளை சோமசுந்தர நாயகர் (ஆகஸ்ட் 16, 1846 - பிப்ரவரி 22, 1901) தமிழகத்துச் சைவ அறிஞர்களில் ஒருவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தக் கருத்துக்களை திரட்டி ஒருங்கிணைத்த முன்னோடிகளில் ஒருவர். மறைமலையடிகளின் ஆசிரிய

சூளை சோமசுந்தரர்

-------------------------------------------

ஜே. எம். நல்லுச்சாமிப்பிள்ளை [ஜே.எம்.நல்லசாமி பிள்ளை] (நவம்பர் 24, 1864 - ஆகஸ்ட் 11, 1920) சைவ மறுமலர்ச்சி அலையை உருவாக்கிய முன்னோடி அறிஞர்களில் ஒருவர். சைவசித்தாந்த ஆராய்ச்சியாளர், இதழாளர், சொற்பொழிவாளர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய சைவ மீட்பு இயக்கத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர். மாவட்ட நீதிபதியாகப் பணிபுரிந்தார்.

============

நா.கதிரைவேற் பிள்ளை (டிசம்பர் 21, 1871 - 1907) மேலைப்புலோலி நா.கதிரைவேற்பிள்ளை. இலங்கைத் தமிழறிஞர். சைவ அறிஞர். இலக்கண ஆய்வு, அகராதிப்பணி, பதிப்புப்பணி ஆகியவற்றில் ஈடுபட்டார். பெரும்பாலும் சென்னையில் வாழ்ந்தார். சைவத்தின் பொருட்டு கண்டன இலக்கிய நூல்களை வெளியிட்டார். இராமலிங்க வள்ளலாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையே நடந்த அருட்பா மருட்பா விவாதத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி நடத்தியவர்.

====================

ம.தி.பானுகவி (1866-1926) தமிழறிஞர், சைவ அறிஞர், துறவி. இதழாளராகவும் சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தவர். திருவத்திபுரம் திருநாவுக்கரசு மடத்தின் தலைவராக இருந்தார். அருட்பா மருட்பா விவாதத்தில் இராமலிங்க வள்ளலார் தரப்பை ஆதரித்தார்

=====================

அருட்பா மருட்பா விவாதம் (1867-1904) இராமலிங்க வள்ளலாரின் பாடல்கள் அருட்பா என்னும் பெயரில் தொகுக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் உருவாக்கிய விவாதம். ஆறுமுக நாவலர் சைவைத்திருமுறைகளே அருட்பாக்கள், இராமலிங்க வள்ளலார் எழுதியவை மருட்பாக்கள் என வாதிட்டார். இருபக்கமும் வெவ்வேறு அறிஞர்கள் இணைந்துகொள்ள மாறிமாறி கண்டன நூல்கள் வெளியிடப்பட்டன. அவதூறு வழக்குகளும் நடைபெற்றன.

 





No comments:

Post a Comment