Wednesday, June 22, 2022

கட்டுரைகள்

 சுவாமி விபுலானந்தர் (மார்ச் 27, 1892 – ஜுலை 19, 1947) (சுவாமி விபுலாநந்தர், விபுலாநந்த அடிகள்,விபுலானந்த அடிகள்) இசைத்தமிழறிஞர், பேராசிரியர், துறவி. இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை என பல துறைகளில் இயங்கியவர். இசைத்தமிழ் ஆய்வு, இலக்கிய ஆய்வு, நாடகத்தமிழ் ஆய்வு, மொழியியல் என ஆய்வுப்பணிகளை விரித்துக் கொண்டவர். யாழ் நூல் என்ற இசைவரலாற்று நூலும், மதங்க சூளாமணி என்ற நாடக ஆய்வு நூலும் இவருடைய முக்கியமான படைப்புகள். முதன்மையாக தமிழிசை வரலாற்றில் மூலநூல்களில் ஒன்று என கருதப்படும் யாழ்நூல் இயற்றியவர் என அறியப்படுகிறார்.

விபுலானந்தர்

========================================

சயாம் மரணரயில்பாதை: (1942-1943) ‘சயாம் மரண ரயில்’ எனப் பொதுவாக அழைக்கப்படும் தாய்லாந்து – பர்மா இரயில் பாதை. இது இரண்டாம் உலகப்போரில் போது (செப்டம்பர் 16, 1942 - அக்டோபர் 17, 1943) கட்டப்பட்ட 415 கி.மீ (258 மைல்கள்) நீளமுள்ள ரயில்பாதை. தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் நோக்கத்தில் ஜப்பானியர்களால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ரயில் பாதை அமைக்கும் பணியில் ஏறக்குறைய 1,80,000 லிருந்து 2,50,000 ஆசியத் தொழிலாளர்களும், 60,000-க்கும் மேற்பட்ட போர்க் கைதிகளும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர். மிகக்கடுமையான வேலைச்சூழல், போதிய உணவு இல்லாமை, நோய், வன மிருகங்களின் தாக்குதல் மற்றும் ஜப்பானியர்கள் விதித்த மிகக் கடுமையான தண்டனை காரணமாக சுமார் 90,000 ஆசியத் தொழிலாளர்களும் 12,000-க்கும் மேற்பட்ட போர்க் கைதிகளும் இறந்து போயினர். இந்த ரயில் பாதையை ஜப்பானிய அரசாங்கம் Tai – Men Rensetsu Tetsudō (தாய்லாந்து-பர்மா இணைப்பு ரயில்வே) என அழைத்தது. இந்த ரயிலின் தாய்லாந்து பகுதி இப்போதும் புழக்கத்திலுள்ளது. பாங்காங்கில் இருந்து நாம் டோக் (Nam Tok) என்னும் ஊருக்குச் செல்லும் மூன்று ரயில்கள் ஒவ்வொரு நாளும் அதில் செல்கின்றன. அப்போது கட்டப்பட்ட பாலமும் புழக்கத்திலுள்ளது. தாய்லாந்து எல்லையில் இருந்து பர்மாவின் மௌல்மெய்ன் (Moulmein) என்னும் இடத்த்துக்கு செல்லும் இந்த ரயிலின் பர்மியப் பகுதி பல ஆண்டுகளுக்கு முன்னரே கைவிடப்பட்டது

சயாம் மரண ரயில்

=========================================================

கணபதி ஐயர் பிரம்மச்சாரிய விரதம் பூண்டவர். வடக்கு இலங்கைக்குப் பயணம் செய்தபோது திருவையாறு (இலங்கை) வைரவர் சந்நிதியில் பக்தியேறப்பெற்று வைரவர் பேரில் பதிகம் பாடினார். இவர் வடதேச யாத்திரைக்குப்பின் வட்டுக்கோட்டை திரும்பி வந்து தன் உறவினராகிய சண்முக ஐயர் என்பவர் சில கீர்த்தனைகள் மட்டுமே பாடி விட்டிருந்த சுந்தரிநாடகம் என்னும் கவிதைநூலை வாளபிமன் நாடகம் என தலைப்பிட்டு பாடி முடித்தார். அதன் பின் அவர் புகழ்பெற்ற கவிஞராக அறியப்பட்

கணபதி ஐயர்

===================================

தி.க.சிவசங்கரன் (மார்ச் 30, 1925 - மார்ச் 25, 2014) தி.க.சி. இலக்கிய விமர்சகர், இதழாளர், முற்போக்கு இலக்கியப் பார்வை கொண்டவர். தாமரை இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

கணபதிப் பிள்ளை

==========================

ஜெயமோகன் (ஏப்ரல் 22, 1962) தமிழ் எழுத்தாளர். தமிழில் நாவல்கள், சிறுகதைகள், இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு, பயணக்கட்டுரைகள், பண்பாடு, மரபு, மதம், தத்துவம், என பல தளங்களில் எழுதி வருகிறார். இலக்கியம், தத்துவம், மதம், மரபு என பல தலைப்புகளில் பேருரைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதி வருகிறார். திரைத்துறையில் பணியாற்றுகிறார். ஜெயமோகன் வாசகர்களால் உருவாக்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் அமைப்பு எழுத்தாளர்கள் வரலாற்றாய்வாளர்கள் பற்றிய கருத்தரங்குகள், எழுத்து, வாசிப்பு, விவாதம் பற்றிய பயிற்சிப்பட்டறைகளை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் இலக்கிய விருதுகள் வழங்கி வருகிறது.

ஜெயமோகன்

=====================

அகிலன் (1922-1988 ) பி.வி.அகிலாண்டம். தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நாவலுக்காக ஞானபீடப் பரிசு பெற்றவர். பொதுவாசிப்புக்குரிய புகழ்பெற்ற நாவல்களை எழுதியிருக்கிறார்.இந்திய தேசியவாத அரசியல் சார்புகொண்டிருந்தார்.

அகிலன்

=========================

ர.சு.நல்லபெருமாள் (ரவணசமுத்திரம் சுப்பையா பிள்ளை நல்லபெருமாள்) (1931 - ஏப்ரல் 20, 2011) தமிழ் நாவலாசிரியர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். காந்தியக் கொள்கைகளையும் சைவசித்தாந்த நோக்கையும் கொண்டு எழுதியவர். மார்க்ஸியத்துக்கு எதிரான வலதுசாரி பொருளியல் சிந்தனைகளும் ஃப்ராய்டிய உளவியல் ஆய்வுமுறைமையும் கொண்டவர். வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர் ர சு நல்லபெருமாள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நாரண துரைக்கண்ணன் (ஆகஸ்டு 24, 1906 - ஜூலை 22, 1996) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர். விடுதலைப்போராட்ட வீரர். தொடக்ககால இதழாளர்களில் ஒருவர், எழுத்தாளர் சங்கச் செயல்பாட்டாளர். தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பின்னர் சுயமரியாதை இயக்க ஆதரவாளராகவும் திகழ்ந்தவர்.

நாரண துரைக்கண்ணன்

-----------------------================================

ஆதவன் (மார்ச் 21, 1942 - ஜூலை 19, 1987) தமிழ் எழுத்தாளர். அறுபதுகளுக்கு பின் எழுதத்துவங்கி, பெருநகர வாழ்வின் நுணுக்கங்களை உளவியல் நோக்கில் எழுதியவர். தேசியப் புத்தக நிறுவனத்தில் பணியாற்றினார்.

ஆதவன்



 



No comments:

Post a Comment