Saturday, June 25, 2022

பதிவுகள்

  எஸ்.ராமகிருஷ்ணன் பற்றி தமிழ் விக்கியில் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு என்றுமுள்ள ஒரு சந்தேகம் அகன்றது. இரண்டு எஸ்.ராமகிருஷ்ணன்கள் உள்ளனர். இருவருமே முக்கியமானவர்கள். இருவரைப்பற்றிய பதிவிலும் இன்னொருவர் குறிப்பிடப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒரு கலைக்களஞ்சியத்திற்குப் பின்னால் சரியான ஓர் ஆசிரியப் பிரக்ஞை தேவை என்பதற்குச் சான்றாக இதைக் கருதுகிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணன்

=================================

எஸ்.ராமகிருஷ்ணன் பற்றி தமிழ் விக்கியில் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு என்றுமுள்ள ஒரு சந்தேகம் அகன்றது. இரண்டு எஸ்.ராமகிருஷ்ணன்கள் உள்ளனர். இருவருமே முக்கியமானவர்கள். இருவரைப்பற்றிய பதிவிலும் இன்னொருவர் குறிப்பிடப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒரு கலைக்களஞ்சியத்திற்குப் பின்னால் சரியான ஓர் ஆசிரியப் பிரக்ஞை தேவை என்பதற்குச் சான்றாக இதைக் கருதுகிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்)

======================

விபுலானந்தர் என்றால் பெரும்பாலானவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்காது. சிலர் யாழ்நூல் என்பார்கள். யூபிஎஸ்சி போட்டித்தேர்வு எழுதுபவர்கள் தகவல்களை தேடி அலைவதைக் காணமுடிகிறது. இந்த விக்கிப்பதிவு, இதன் இணைப்புகள் ஒரு முழுமையான நூல் அளவுக்கே விபுலானந்தரை அறிமுகம் செய்கின்றன

விபுலானந்தர்

--------------------------

ஜெகசிற்பியன்

அன்புள்ள ஜெமோ

நன்றி.

நான் இளவயதில் ஆலவாயழகன்பத்தினிக்கோட்டம் எல்லாம் படித்திருக்கிறேன். ஆலவாயழகனின் மொழி அந்த வயதில் ஒருமாதிரி ஒரு கிறுகிறுப்பை அளிப்பதாகவே இருந்தது.

==================

இளங்கோ கிருஷ்ணன் – தமிழ் விக்கி

ஆழ்கடல் குருட்டு மீன்
சுமந்தலைகிறது
மொத்தக் கடலின் பாரத்தையும்.

நான் உண்மையாகவே கேட்கிறேன். ஆலவாயழகனின் மொழியை கிண்டல் செய்யும் நகுபோலியன் லா.ச.ராமாமிருதத்தின் மொழி பற்றி என்ன சொன்னார்? இரண்டுமே flowery and futile நடைதான். Juvenile காலகட்டத்தில் ஒருவர் ஆலவாயழகனை வாசித்து கொஞ்சம் உணர்ச்சிவசப்படலாம். ஐம்பது அறுபது வயதிலும் லா.ச.ரா படித்து உச் உச் அடாடா கொட்டுவதை எதில் சேர்ப்பது?

லா.ச.ரா – தமிழ் விக்கி

-----------

ஆரோக்கிய நிகேதனம்

அன்புள்ள ஜெ

ஆரோக்கிய நிகேதனம் படித்தேன். அருமையான நாவல். மொழியாக்கமும் சிறப்பாகவே இருந்தது. ஆனால் சாகித்திய அகாதெமி பதிப்பகத்தாரின் கவனக்குறைவால் எழுத்துப்பிழைகள் மண்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு பத்தியிலும் எழுத்துப்பிழைகள் விரவிக்கிடக்கின்றன.  இதனால் நல்லதொரு வாசிப்பனுபவத்தை  இழக்க நேரிட்டது என்றே கூறவேண்டும். இனி ஆரோக்கிய நிகேதனத்தை படிக்கப் போகும் நண்பர்கள் வ.உ.சி நூலகம் வெளியிட்டுள்ள புத்தகத்தை தேர்வு செய்வதே நல்லதென்று நினைக்கிறேன்

================

அ.ரெங்கசாமி போன்ற முன்னோடித் தமிழ் எழுத்தாளர்களை தமிழகம் தங்களவர்களாக உணரும் ஒரு களம் அது.

ஆனால் நம் உறவுகளுக்கு நிகழ்ந்த வரலாற்றுப் பேரழிவின் எளிய சித்திரம் நம்மை வந்தடைய அரைநூற்றாண்டு ஆகியது. ரங்கசாமியின் நினைவுச்சின்னம் வரவேண்டியிருந்தது.

அ.ரெங்கசாமி

------------------

தரப்படுத்தப்பட்ட மொழி பொதுத்தொடர்புக்கு உரியது. அந்த மொழியில் செய்திக்கட்டுரைகள், துண்டுப்பிரசுரங்கள் எழுதப்படலாம். அந்த மொழியில் இருந்து எந்த அளவுக்கு முன்னகர்ந்திருக்கிறது என்பதே கவிதைமொழிக்கும் புனைவுமொழிக்கும் அளவுகோல். மொழியிலக்கணத்தை மீறியே இலக்கியம் அதை எய்துகிறது. இலக்கியம் என்பது மொழி தன்னை கலைத்து அடுக்கிக்கொள்ளும் முறை. பறவை சிறகுகளை கலைத்து நீவிக்கொள்வதுபோல

அ.கி.பரந்தாமனார்

=======================

அன்புள்ள சரத்

தமிழ் விக்கியில் எல்லா செய்திகளும் உள்ளன. ஆகுன் (அக்னி) த.நா.குமாரசாமி மொழியாக்கம் செய்த முதல் தாராசங்கரின் படைப்பு.

ஜெ

த.நா.குமாரசாமி

No comments:

Post a Comment