Saturday, June 18, 2022

puthuppathivu

   ஜெகசிற்பியன் (ஜூன் 19, 1925 - மே 26, 1978) 1950-1980 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த எழுத்தாளர். வாரப் பத்திரிகைகளில் பொதுவாசிப்புக்காக நிறைய எழுதினார். இன்றும் அவரது வரலாற்று நாவல்கள் நினைவு கூரப்படுகின்றன.

ஜெகசிற்பியன்

---------------------===============================

விக்ரமன் (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) தமிழ் எழுத்தாளர், இதழாளர். அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 54 ஆண்டுகளாக அமுதசுரபி மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.வரலாற்று நாவல்களை எழுதியிருக்கிறார்.

விக்ரமன்

=================================

மீ.ப.சோமு (ஜூன் 17, 1921 - ஜனவரி 15, 1999) தமிழ் எழுத்தாளர். நாவல்களும் சிறுகதைகளும் மரபுக்கவிதைகளும் எழுதியவர். பண்ணிசை ஆராய்ச்சியாளர். இதழாளர். வானொலி நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணியாற்றினார்.

மீ ப சோமு

=============================================

அசோகமித்திரன் [ஜ. தியாகராஜன்] (செப்டம்பர் 22, 1931 – மார்ச் 23, 2017) தமிழின் நவீன எழுத்தாளர்களில் ஒருவர். பெருநகரங்களில் வாழும் நடுத்தரப் பொருளாதாரம் கொண்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை கலையமைதியுடன் எழுதியவர். இருத்தலியல் மற்றும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மெய்யியல் ஆகியவற்றில் ஆர்வமும் தேடலும் கொண்டிருந்தார். குறைத்துச்சொல்லும் அழகியலும் வடிவ ஒருமைகொண்ட நவீனத்துவ கட்டமைப்பும் கொண்ட படைப்புகளை எழுதியவர். கேந்திர சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகள் பெற்றவர். கணையாழி சிற்றிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். நவீனத் தமிழிலக்கியத்தின் நவீனத்துவ மரபின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.

அசோகமித்திரன்

=====================

பி. எஸ். ராமையா (மார்ச் 24, 1905 - மே 18, 1983) சிறுகதை எழுத்தாளர், மணிக்கொடி இதழை நடத்திய ஆசிரியர், திரைப்பட எழுத்தாளர். தமிழில் சிறுகதை மலர்ச்சிக்கு காரணமான முன்னோடி.

பி எஸ் ராமையா

=================]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

எஸ். ராமகிருஷ்ணன் (ஏப்ரல் 13, 1966) தமிழில் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம்,குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றை சினிமா, ஊடகம், இணையம் ஆகிய தளங்களில் எழுதி வருபவர். உலக இலக்கியம் மற்றும் உலக சினிமா குறித்த  உரைகள் நிகழ்த்திவருகிறார்.

எஸ். ராமகிருஷ்ணனின் ஆரம்பகட்ட கதைகள் கறாரான யதார்த்தவாத அல்லது இயல்புவாத வகைமையை சேர்ந்தவை. பின்னர் மாய யதார்த்தப் புனைவுகளை எழுதினார். கரிசல் நில மக்களின் உள்ளங்களை கட்டமைத்திருக்கும் தொன்மங்களையும் ஆழ்படிமங்களையும் எழுத்திற்குள் கொண்டுவந்தவர்.

எஸ்.ராமகிருஷ்ணன்

==========================

யுவன் சந்திரசேகர் (பிறப்பு: டிசம்பர் 14, 1961) தமிழ் எழுத்தாளர், கவிஞர். பின்நவீனத்துவ அழகியல் கூறுகளை கொண்டு எழுதிய முக்கியமான படைப்பாளி. எம்.யுவன் என்ற பெயரில் கவிதை எழுதினார். மாற்றுமெய்மை என யுவன் சந்திரசேகர் வரையறை செய்யும் ஒருவகை மாய யதார்த்தத்தை அவருடைய படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.

யுவன் சந்திரசேகர்

=====================================

அ. முத்துலிங்கம் (ஜனவரி 19, 1937) முதன்மையான நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், நாவல்கள் என விரியும் அ. முத்துலிங்கத்தின் படைப்புகள் வடிவ ஒழுங்கும், கலையழகும், அங்கதத்தன்மையும் கொண்டவை. இலங்கையில் பிறந்து பணியின் பொருட்டு வசித்த பல்வேறு நாடுகளின் பண்பாடுகளையும் , முரண்களையும், மனிதர்களையும் எழுத்தில் கொண்டுவந்த கதைசொல்லி. கனடா இலக்கியத் தோட்ட அமைப்பின் நிறுவனர்.அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை உட்பட வெவ்வேறு பல்கலைகளில் தமிழ் இருக்கைகள் அமைக்க முன்முயற்சி எடுத்தவர்.

அ முத்துலிங்கம்

No comments:

Post a Comment