Monday, June 13, 2022

டைடில்கள்

    பொன்னியின் செல்வன் (1950 – 1955) கல்கி எழுதிய பொதுவாசிப்புக்குரிய வரலாற்று நாவல். இது ஐந்து பாகங்களைக் கொண்டது. இராஜராஜ சோழர் என்று அழைக்கப்பட்ட அருள்மொழிவர்மன், தனக்குக் கிடைத்த சோழப் பேரரசின் அரியணையைத் தியாகம் செய்தமையை விவரிக்கிறது . ‘பொன்னியின் செல்வன்’ என்பது, இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று. தமிழ் வரலாற்றின் பொற்காலம் எனப்படும் சோழர் காலத்தையும், அதில் தலையாயவர் எனப்படும் ராஜராஜ சோழனையும் சித்தரிப்பதனால் தமிழகத்தில் மிகப்புகழ்பெற்ற நாவலாக இந்நூல் உள்ளது. தமிழ்ப் பதிப்புலகத்தில் பொதுவாசிப்புக்குரிய நாவல் வகையில் பொன்னியின் செல்வன் நாவல்தான் முதலிடத்தில் உள்ளது. பொன்னியின் செல்வன்

=============================================
ல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி, செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) தமிழில் பொதுவாசகர்களுக்கான பெரும்புகழ்பெற்ற கற்பனாவாதக் கதைகளை எழுதியவர். இந்திய தேசிய இயக்கத்தில் இருந்து உருவாகி வந்த படைப்பாளி. சுதந்திரப்போராட்ட வீரர். தமிழிசை இயக்கத்தை முன்னெடுத்தவர். தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் உரைநடையின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்று கற்பனாவாத நாவல்கள் தமிழ் பொதுவாசிப்புத்தளத்தைச் சேர்ந்த பெரும் செவ்வியல்படைப்புகள் எனப்படுகின்றன. கல்கி வார இதழை நிறுவியவர். தமிழில் கேளிக்கைசார்ந்த வாசிப்
கல்கி
=======================================
ஆதவன் (மார்ச் 21, 1942 - ஜூலை 19, 1987) தமிழ் எழுத்தாளர். அறுபதுகளுக்கு பின் எழுதத்துவங்கி, பெருநகர வாழ்வின் நுணுக்கங்களை உளவியல் நோக்கில் எழுதியவர். தேசியப் புத்தக நிறுவனத்தில் பணியாற்றினார்.

==========================
அ. ரெங்கசாமி (1930) மலேசியாவில் வாழும் நாவலாசிரியர். இவரது நாவல்கள் மலேசிய இந்தியர்களின் இக்கட்டான வரலாற்று தருணங்களைக் கருப்பொருளாகக் கொண்டவை. 'கோலலங்காட் ரெங்கசாமி' எனும் புனைப்பெயரால் அறியப்படுகிறார்.

=============================
அசோகமித்திரன் [ஜ. தியாகராஜன்] (செப்டம்பர் 22, 1931 – மார்ச் 23, 2017) தமிழின் நவீன எழுத்தாளர்களில் ஒருவர். பெருநகரங்களில் வாழும் நடுத்தரப் பொருளாதாரம் கொண்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை கலையமைதியுடன் எழுதியவர். இருத்தலியல் மற்றும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மெய்யியல் ஆகியவற்றில் ஆர்வமும் தேடலும் கொண்டிருந்தார். குறைத்துச்சொல்லும் அழகியலும் வடிவ ஒருமைகொண்ட நவீனத்துவ கட்டமைப்பும் கொண்ட படைப்புகளை எழுதியவர். கேந்திர சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகள் பெற்றவர். கணையாழி சிற்றிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். நவீனத் தமிழிலக்கியத்தின் நவீனத்துவ மரபின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.
----------------------------------------------------------------------------------------------
தி. ஜானகிராமன் (பிப்ரவரி 28, 1921 - நவம்பர் 18, 1982) தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், பயண இலக்கியம் ஆகியவற்றை எழுதினார். தஞ்சாவூர் நிலத்தின் வாழ்க்கையை எழுதியவர் என்றும், இசை சார்ந்த நுட்பங்களை இலக்கியமாக்கியவர் என்றும் விமர்சகர்களால் கருதப்படுகிறார். இந்திய அரசின் செய்தி ஒலிபரப்புத்துறையில் பணியாற்றினார். தி. ஜானகிராமன் எழுதிய மோகமுள் தமிழின் தலைசிறந்த நாவல் என்று சொல்லும் விமர்சகர்கள் உண்டு. சிறுகதைகளில் சாதனையாளர் என்றும் கருதப்படுகிறார் 
=========================
உ.வே.சாமிநாதையர் (பிப்ரவரி 19, 1855 – ஏப்ரல் 28, 1942) உ.வே.சாமிநாத ஐயர். உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாத ஐயர். சுருக்கமாக உ.வே.சா. தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் ஆய்வாளர், உரையாசிரியர். வாழ்க்கை வரலாற்றெழுத்திலும் முன்னோடியாகக் கருதப்படுபவர்.

No comments:

Post a Comment