Monday, May 30, 2022

கமல்

மௌன மயக்கங்கள் - கவிதை நூல் - தமிழக அரசு விருது (1982) பாவேந்தர் விருது - தமிழக அரசு (1991) கபிலர் விருது - கவிஞர் கோ பட்டம் - குன்றக்குடி siRpi தமிழிலக்கியத்தில் சில படைப்பாளிகள் இயல்பாக வாசகர்களால் மறக்கப்படுவார்கள். ஆனால் தொடர்ந்து விமர்சகர்களால் அவர்கள் நினைவூட்டப்படுவார்கள். நிலைநிறுத்தப்படுவார்கள். ஆர்.சண்முகசுந்தரம் அவர்களில் ஒருவர். அவருடைய படைப்புகள் வாசகனை சீண்டுபவை அல்ல. சிந்திக்க வைப்பவையும் அல்ல. அவை எளிய யதார்த்தச் சித்திரங்கள், நேர்மையால் கலையாக ஆனவை. அவரை முன்வைத்தவர்களில் க.நா.சுப்ரமணியம், சிற்பி பாலசுப்ரமணியம், பெருமாள் முருகன் என மூன்று தலைமுறை விமர்சகர்கள் உண்டு. r.sanmukasuwtharam சுஜாதா தமிழில் பொதுவாசிப்புக்குரிய தளத்தில் செயல்பட்டவர்களில் கல்கிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ஆளுமை. கல்கியைப் போலவே எல்லா பக்கங்களையும் படிக்கச் செய்யும் நடையைக் கொண்டிருந்தார். எல்லா தளங்களிலும் தொடர்ச்சியாக எழுதினார். மிகப்பெரிய வாசகர் வட்டத்தையும், அவரைப்போலவே எழுதும் வழித்தோன்றல்களின் வரிசையையும் கொண்டிருந்தார். சுஜாதாஅ. முத்துலிங்கம் (ஜனவரி 19, 1937) முதன்மையான நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், நாவல்கள் என விரியும் அ. முத்துலிங்கத்தின் படைப்புகள் வடிவ ஒழுங்கும், கலையழகும், அங்கதத்தன்மையும் கொண்டவை. இலங்கையில் பிறந்து பணியின் பொருட்டு வசித்த பல்வேறு நாடுகளின் பண்பாடுகளையும் , முரண்களையும், மனிதர்களையும் எழுத்தில் கொண்டுவந்த கதைசொல்லி. கனடா இலக்கியத் தோட்ட அமைப்பின் நிறுவனர்.அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை உட்பட வெவ்வேறு பல்கலைகளில் தமிழ் இருக்கைகள் அமைக்க முன்முயற்சி எடுத்தவர். அ.முத்துலிங்கம் க.நா.சுப்ரமணியம் (கந்தாடை நாராயணசாமி ஐயர் சுப்ரமணியம், க.நா.சு) (ஜனவரி 31, 1912 - ஜனவரி 18, 1988) நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான சிந்தனைப்போக்கு க.நா.சுப்ரமணியம் மரபு எனப்படுகிறது. க.நா.சு கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி, செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) தமிழில் பொதுவாசகர்களுக்கான பெரும்புகழ்பெற்ற கற்பனாவாதக் கதைகளை எழுதியவர். இந்திய தேசிய இயக்கத்தில் இருந்து உருவாகி வந்த படைப்பாளி. சுதந்திரப்போராட்ட வீரர். தமிழிசை இயக்கத்தை முன்னெடுத்தவர். தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் உரைநடையின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்று கற்பனாவாத நாவல்கள் தமிழ் பொதுவாசிப்புத்தளத்தைச் சேர்ந்த பெரும் செவ்வியல்படைப்புகள் எனப்படுகின்றன. கல்கி வார இதழை நிறுவியவர். தமிழில் கேளிக்கைசார்ந்த வாசிப்பையும் அதற்கான எழுத்துமுறையையும் உருவாக்கி நிறுவனப்படுத்தியவர் என்று அறியப்படுகிறார். கல்கி பொன்னியின் செல்வன் (1950 – 1955) கல்கி எழுதிய பொதுவாசிப்புக்குரிய வரலாற்று நாவல். இது ஐந்து பாகங்களைக் கொண்டது. இராஜராஜ சோழர் என்று அழைக்கப்பட்ட அருண்மொழிவர்மன், தனக்குக் கிடைத்த சோழப் பேரரசின் அரியணையைத் தியாகம் செய்தமையை விவரிக்கிறது . ‘பொன்னியின் செல்வன்’ என்பது, இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று. தமிழ் வரலாற்றின் பொற்காலம் எனப்படும் சோழர் காலத்தையும், அதில் தலையாயவர் எனப்படும் ராஜராஜ சோழனையும் சித்தரிப்பதனால் தமிழகத்தில் மிகப்புகழ்பெற்ற நாவலாக இந்நூல் உள்ளது. தமிழ்ப் பதிப்புலகத்தில் பொதுவாசிப்புக்குரிய நாவல் வகையில் பொன்னியின் செல்வன் நாவல்தான் முதலிடத்தில் உள்ளது. பொனியின் செல்வன் கமல்ஹாசன் (7 நவம்பர் 1954 ) தமிழ் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், தமிழில் திரைக்கதை என்னும் தனித்த இலக்கியவடிவத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். கவிதைகள் எழுதியிருக்கிறார். கமல்ஹாசன்

No comments:

Post a Comment