Monday, June 27, 2022

பதிவுகள்

 இச்சூழலில்தான் அழகியல்விமர்சனம் மேலும் அழுத்தமான தேவை உடையதாகிறது. எவர் முன்னோடிகள், ஏன்  என்று அது நிறுவும். அவர்களின் எழுத்தின் அழகியல்போதாமைகள் வெற்றிகளை அடையாளம் காணும். அவர்கள் உருவாக்கிய தொடக்கத்தை கண்டறிந்து மேலே செல்லும் வழிகளை காட்டும். சொல்லப்போனால் ஆரோக்கியமான stem cell களை அடையாளம் காணும் முயற்சிதான் அழகியல் விமர்சனம் என்பது.

நவீன் மலேசிய இலக்கிய முன்னோடியான அ.ரங்கசாமியின் நாவல்களை பற்றி எழுதியிருக்கும் இந்த இலக்கியவிமர்சனம் அவ்வகையில் மிக முக்கியமான ஒன்று

***

கா.சிவத்தம்பி, தமிழ் விக்கி

மா.இளங்கண்ணன் தமிழ் விக்கி

============================================

அ..ச.ஞானசம்பந்தன் தந்தையிடம் தொடக்க கல்வியை பெற்றார். பின்னர் லால்குடி போர்டு உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி முடித்து 1935-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இண்டர்மீடியட் படித்தார். அண்ணாமலைப் பல்கலையில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் அவரது தமிழ் அறிவை அடையாளம் கண்டு அவரை இயற்பியலில் இருந்து தமிழுக்கு மாறும்படி செய்தார். அக்கல்லூரியில் படிக்கும் போது வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி , திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்ரா.ராகவையங்கார் ,தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழ் அறிஞர்களின் தொடர்பு கிடைத்தது. அண்ணாமலை பல்கலையில் தமிழில் இளங்கலையும் முதுகலையும் பயின்றார்

. அ.சஞா

===================================

கா.சுப்ரமணிய பிள்ளையின் அழைப்பின் பேரில் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த் துறையில் விரிவுரையாளராக சுவாமி விபுலானந்தர் சோமசுந்தர பாரதியார் ஆகிய புலவர்களின் தலைமையில் ஆறு ஆண்டுகள் (1930-1936) பணிபுரிந்தார். 1936 முதல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றினார். எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப் பணியில் சேதுப்பிள்ளையும் பங்காற்றியுள்ளார். எஸ். வையாபுரிப் பிள்ளையின் ஓய்வுக்குப்பின் சேதுப்பிள்ளை தமிழ்த்துறைத் தலைவராகி (1946-1951) பேரகராதி தொகுப்புப் பணியை ஏற்றார்.

ரா.பி சேதுப்பிள்ளை

======================================

1921-ல் திருநெல்வேலியில் டி.கே.சிதம்பரநாத முதலியார் கம்பன்கழகம் அமைப்பை தொடங்கினார். அங்கே கம்பராமாயண உரைகள் நடைபெற்றன. அவற்றை கேட்டும்கூட சேதுப்பிள்ளையின் உள்ளம் அதில் ஈடுபாடு கொள்ளவில்லை. சுப்பையா முதலியார் என்பவர் கம்பனைப் பற்றி பேசும்போது ‘வெள்ளெருக்கஞ்ச் சடைமுடியான், வெற்பெடுத்த திருமேனி...’ என தொடங்கும் பாடலை கேட்டபின் கம்பராமாயணம் மீது ஆர்வம் கொண்டார். சுப்பையா பிள்ளையிடம் கம்பன் கவிநயத்தை பாடம் கேட்டபின் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் ஆற்றத்தொடங்கினார்.

பரிதிமாற் கலைஞர்

==========================================

ஆங்கிலத்தில் ஒரே பொருளைப் பற்றி பதினான்கு அடிகளில் எழுதக்கூடிய ‘சானட்’ என்ற இலக்கிய வகையின் மீது ஈர்ப்பு கொண்ட சாஸ்திரியார், அவ்வப்போது தமக்குத் தோன்றும் கருத்துகளை பதினான்கு அடி கொண்ட நேரிசை ஆசிரியப்பாக்களாக எழுதிவந்தார். கருத்திலும் வடிவத்திலும் புதிய முயற்சியான இந்தத் தனிப்பாசுரங்களை மு.சி. பூர்ணலிங்கம் பிள்ளை ஆசிரியராக இருந்து நடத்திவந்த ‘ஞானபோதினி’ மாத இதழில் 1897 முதல் தொடர்ந்து வெளியிட்டுவந்தார். புதிய முயற்சி என்பதால் மக்கள் மத்தியில் இதற்கு எத்தகைய வரவேற்பு இருக்கும் என்பதை உண்மையாக அறிய விரும்பிய சாஸ்திரியார் தன் உண்மைப் பெயரை மறைத்துக்கொண்டு பரிதிமாற்கலைஞர் என்கிற புனைபெயரால் வெளியிட்டுவந்தார்.

க.நா. கணபதிப்பிள்ளை

 

No comments:

Post a Comment