Friday, July 29, 2022

கி.வாஜ

கி.வா. ஜகந்நாதன் கலைமகளின் ஆசிரியர் பொறுப்பில் 1932 முதல் அவர் மறைவது வரை 53 ஆண்டுகள் இருந்தார். கலைமகளில் மணிக்கொடி எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி கு.ப. ராஜகோபாலன் போன்றவர்கள் தொடர்ந்து எழுதினர். ஈழப்படைப்பாளி இலங்கையர்கோன் போன்றவர்களை கி.வா.ஜகந்நாதன் அறிமுகம் செய்தார். அகிலன், பி.வி.ஆர், ஆர்வி போன்ற அக்காலத்தைய எழுத்தாளர்கள் கலைமகளில்தான் அறிமுகமானார்கள். பின்னர் குடும்ப இதழாக கலைமகள் மாறியபோது ஆர்.சூடாமணிராஜம் கிருஷ்ணன்அநுத்தமா போன்ற பெண் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். கலைமகள் பெண் எழுத்தாளர்களின் ஒரு வரிசையையே உருவாக்கியது. இலக்கியப்படைப்பாளியாகிய அம்பை கூட கலைமகளில் அறிமுகமானவரே. தமிழிலக்கியத்திற்கு கலைமகளின் கொடை முதன்மையானது.கலைமகளில் விடையவன் என்னும் பேரில் அவர் எழுதிய பழந்தமிழிலக்கிய வினாவிடை நெடுங்காலம் தொடர்ந்து வந்தது.

No comments:

Post a Comment