Saturday, July 9, 2022

அபி

ப.சிங்காரம் தமிழகத்தில் பள்ளிப்படிப்பு படிக்கையிலேயே மணிக்கொடி, கலைமகள் இதழ்களுக்கு அறிமுகமாகியிருந்தார். அவற்றில் கடிதங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தோனேசியா சென்றபின் அங்கே ஆங்கிலத்தில் நிறைய படிக்கத் தொடங்கினார். அவருடைய பார்வையிலும் நடையிலும் செல்வாக்கு செலுத்தியவர் அமெரிக்க எழுத்தாளரான எர்னஸ்ட் ஹெமிங்வே. இந்தியா திரும்பிய பின் இரண்டு நாவல்களை எழுதினார். அவற்றில் முதல் நாவலான ’கடலுக்கு அப்பால்’ 1959-ல் கலைமகள் பரிசு பெற்று கலைமகள் காரியாலயத்தால் வெளியிடப்பட்டது. இரண்டாம் நாவலான புயலிலே ஒரு தோணி நீண்டநாள் கைப்பிரதியாக இருந்து 1972-ல் கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இரு நாவல்களுமே வெளியிடப்பட்ட காலத்தில் இலக்கியவிமர்சகர்களால் கவனிக்கப்படவில்லை. இவ்விரு நாவல்கள் தவிர அவர் சில கட்டுரைகள், கதைகள் எழுதியதாகவும் அவை கைப்பிரதியிலேயே மறைந்தன என்றும் சொல்லப்படுகிறது.

பசிங்காரம்

-----------

கவிமணியின் முக்கியமான படைப்பாக இன்று கருதப்படுவது நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம். இது தமிழின் முதல் எள்ளல் நூல் என்றும் குமரிமாவட்ட வட்டார வழக்கு இலக்கியத்தின் முன்னோடி நூல் என்றும் கருதப்படுகிறது

கவிமணி

---------------

அன்னம் பதிப்பகம் தொடர்ச்சியாக இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தது. சுப்ரபாரதி மணியன்ஜெயமோகன்கோணங்கிஎஸ். ராமகிருஷ்ணன், சோ. தர்மன் போன்றவர்கள் அவரால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள்.

மீரா

---------

விக்டோரியா நினைவு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர் பள்ளி நாட்களிலேயே வெண்பா எழுதுவதிலும், சங்க இலக்கியம், இலக்கணம் பயில்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயின்றார் (1963). இங்கே அபி பல்கலைக்கழக முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலை பயின்றார் (1966). பின் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எழுத்தாளர் லா.ச. ராவின் நாவல் உத்திகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார் (1981).

No comments:

Post a Comment