Sunday, July 24, 2022

பெயர்கள்

எம். கே. தியாகராஜ பாகவதர் . முத்துவீர ஆசாரி கிருஷ்ணசாமி ஆசாரி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி. (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959). தமிழ் திரையுலகின் முதல் உச்சநட்சத்திரம் என அழைக்கப்படுகிறார். திரைப்பாடகர். கர்நாடக இசையில் பயிற்சி பெற்று இசைநிகழ்ச்சிகள் செய்தவர். நாடகங்களிலும் பஜனைகளிலும் உருவாகி வந்த திறந்த வெளியில் உச்ச ஓசையில் பாடும் முறையை திரைக்கு கொண்டுவந்து புகழ்பெறச் செய்தவர். உச்சநிலையிலும் ஓசைப்பிழை உருவாகாத இவருடைய குரல் வளம் புகழ்பெற்றது.

----------------------------------------------------------
கவிமணி ஓர் இலக்கிய மையமாகத் திகழ்ந்தார். எஸ். வையாபுரிப் பிள்ளைகே.ஏ. நீலகண்ட சாஸ்திரி , டி.கே.சிதம்பரநாத முதலியார் ,கல்கி , கே.என். சிவராஜ பிள்ளை ஔவை டி.கே.சண்முகம், ப.ஜீவானந்தம் , அ.சீனிவாசராகவன் , பி.ஶ்ரீ.ஆச்சார்யா , மீ.ப. சோமு என அவருடைய நட்புவட்டம் மிகப்பெரியது. கல்வெட்டாய்வு, வரலாற்றாய்வு, இலக்கியம் ஆகிய தளங்களில் அவர் அவர்களுடன் தொடர் உரையாடலில் இருந்தார்.
===========================

ந.பழனிவேலு எழுதிய முதல் சிறுகதை ‘பிள்ளையார் கோவில் பிரசாதம்’ 1939-ஆம் ஆண்டு தமிழ் முரசு நாளிதழில் வெளிவந்தது.கல்கி, கி.வா.ஜகந்நாதன், ரா.பி. சேதுப்பிள்ளைவாணிதாசன்  போன்றவர்கள் இவரது ஆதர்ச எழுத்தாளர்கள். சிங்கப்பூர் – மலேசிய நாளிதழ்களாக தமிழ் முரசு, தமிழ் நேசன், தமிழ் மலர் உள்ளிட்ட நாளிதழ்களிலும் மாதவி, இந்தியன் மூவி நியூஸ், கலைமலர் உள்ளிட்ட பல மாத இதழ்களிலும் மற்றும் தமிழக, இலங்கை இதழ்களிலும் எழுதியுள்ளார்.1935 முதல் 1960 வரை கிட்டத்தட்ட 50 சிறுகதைகள் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment