Monday, July 4, 2022

பெண்

  லீனா மணிமேகலையின் முதல் படைப்பு ‘ஒற்றையிலையென ’ என்னும் கவிதை தொகுப்பு 2003 ல் வெளியாகியது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ஒளவையார், சூடாமணி, அம்பை, கமலா தாஸ், மஹாஸ்வேதா தேவி என குறிப்பிடுகிறார். பெண்ணிய நோக்கும், இடதுசாரிப்பார்வையும் கொண்டவை லீனாவின் கவிதைகள்.

லீனா மணிமேகலை

====================================

ஞானியாரடிகள் தலைமையில், நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்மொழிய உமாமகேஸ்வரனாருக்குத் "தமிழவேள்' பட்டம் வழங்கப்பட்டது. அவ்விழாவின் இரண்டாம் நாளில் கரந்தைத் தமிழ்க் கல்லூரியை தொடங்க திட்ட அறிவிப்பை உமாமகேஸ்வரனார் வெளியிட்டார். உமாமகேஸ்வரனாரின் முயற்சியால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றத்திலும், கலை மன்றத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்விநிலையம் என்னும் இடம் கிடைத்தது.


தாகூரால் உருவாக்கப்பட்ட சாந்திநிகேதன் போல, தம்மால் உருவாக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கமும் விளங்க வேண்டும் என்று எண்ணினார். அதன் பொருட்டுத் தம் நண்பர் அ. கணபதிப் பிள்ளை என்பவருடன் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். கொல்கத்தா சென்று சாந்திநிகேதனைப் பார்வையிட்டார். காசி இந்துப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார். கரந்தை தமிழ்ச்சங்கம் நூறாண்டு கடந்து இன்றும் தமிழ்க்கல்வி மையமாக திகழ்கிறது.

உமாமேகஸ்வரனார்

======================

’தன் ஸ்வாதீனத்தின்மீது நிர்ப்பந்தத்தை விளைவிக்கும் புறக்காரணிகள் மீது கசப்புணர்வோ அவற்றுக்கு எதிராக வளர்த்தெடுத்துக்கொண்ட வன்மமோ இவர் படைப்புகளில் வெளிப்படுவதில்லை’ என்று க. மோகனரங்கன் மதிப்பிடுகிறார். அம்பையின் செல்வாக்கு உமா மகேஸ்வரியில் உண்டு என்றாலும் அம்பையின் கலையை வெகுவாகத் தாண்டிவந்துவிட்டவர் என ஞாநி சங்கரன் அவரை மதிப்பிடுகிறார்[1]. ‘உமா மகேஸ்வரிதான் எனது தலைமுறையின் பெண் புனைகதையாளர்களில் முதன்மையானவர். அவருடைய கவிதைகளும், மொழியின் அழகும், உணர்வுத்தளமும் சந்திக்கும் அழகிய வரிகளாலானவை. ஆழ்ந்த உணர்ச்சிகரம் கொண்ட படைப்புக்கள் அவருடையவை’ என ஜெயமோகன் மதிப்பிடுகிறார்[2].

உமாஅ மகேஸ்வரி

====================================

அம்பையின் ஆய்வுகள் இரண்டு களங்களைச் சார்ந்தவை . சமூகவியல், இலக்கியம். அம்பை சி. எஸ். லக்ஷ்மி என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு சமூகவியல் கட்டுரைகள் எழுதி வருகிறார். இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலையை பரிவுடன் ஆராய்பவை அம்பையின் கட்டுரைகள். பெண் இசைக்கலைஞர்கள், பெண் நடனக்கலைஞ

அம்பை

------------------------=========================

திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை உருவாக்கிய திருவரங்கம் பிள்ளை அவர்களை 1918-லிருந்து காதலித்து, தந்தையின் சம்மதத்துடன் செப்டம்பர் 2, 1927- ல் திருமயிலை கபாலீஸ்வரர் கோவிலில் மணம் புரிந்துகொண்டார். பின் 1928-ல் பாளையங்கோட்டைக்கு தன் கணவருடன் குடிபெயர்ந்தார். இவர்களுக்கு எட்டு பெண் பிள்ளைகளும், மூன்று ஆண் பிள்ளைகளும் பிறந்தனர்.சுந்தரம்மை, முத்தம்மை, வயிரமுத்து, வேலம்மை, சங்கரியம்மை. பிச்சம்மை, மங்கையர்கரசி, திருநாவுக்கரசு ஆகியோர்.

நீலாம்பிகை

=============================

இவர் எழுதிய வரலாற்று நூல்களில் இந்தியச் சரித்திர மாலை (1938) தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. உழைப்பால் உயர்ந்த ஒருவர் (1952) புத்தர். வாஷிங்டன் என உலகச் சான்றோர்கள் வரலாற்றைக் கூறுவது. பெரியார் மன்றோ (1945) இளைஞர்களுக்காக எழுதிய தனிவரலாற்று நூல். அன்பர் (1955) தனி வரலாற்று நூல். சாகித்ய அகாடமி நிறுவனத்திற்காக சேக்ஸ்பியரின் ஒதல்லோவை மொழிபெயர்த்திருக்கிறார். இதே நிறுவனத்திற்காக தமிழில் சிறந்த சிறுகதைகளை தெரிவுசெய்திருக்கிறார். சிறுகதைக் களஞ்சியம் என்னும் தலைப்பில் வந்த(1959) இந்நூலில் நீண்ட முகவுரை உள்ளது. இத்தொகுதியில் அகிலன்சி.ராஜாகோபாலாச்சாரியார்மாயாவிமீ.ப.சோமுரா.கி.ரங்கராஜன், கி.வா. ஜகன்னாதன் ஆகியோரின். கதைகளுடன் புதுமைப்பித்தன்ந. பிச்சமூர்த்திதி.ஜானகிராமன் ஆகியோரின் கதைகளும் உள்ளன. இதன் இரண்டாவது பகுதி வெளிவரவி 


No comments:

Post a Comment