Saturday, May 28, 2022

பதிவுகள்

மறைமலையடிகள் (மறைமலை அடிகள், சுவாமி வேதாசலம். Maraimalai adikal) (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடித் தலைவர். சைவத் திருப்பணியிலும், சீர்திருத்தப் பணியிலும் பெரும்பங்காற்றியவர். வைதீக விமர்சனம் செய்தவர். எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், ஆசிரியர், இதழாளர், துறவி . சமயம், நவீன இலக்கியம், அறிவியல் ஆராய்ச்சி எனப் பலதுறைகளில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்கள் எழுதியவர். தமிழியம் என்னும் பண்பாட்டு- அரசியலியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். மறைமலை எஸ். வையாபுரிப்பிள்ளை (அக்டோபர் 12, 1891 - பிப்ரவரி 17, 1956) தமிழறிஞர்,தமிழ் காலக்கணிப்பு, தமிழ்நூல் பதிப்பு, தமிழிலக்கிய வரலாற்றாய்வு ஆகிய தளங்களில் பெரும்பங்களிப்பாற்றிய முன்னோடி. இலக்கியத் திறனாய்வாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் .தமிழாய்வில் புறவயமான , பற்றற்ற முறைமையை வலியுறுத்திய வழிகாட்டி. தமிழின் முதல் பேரகராதியை உருவாக்கியவர். மலையாளப் பேரகராதியிலும் பங்களிப்பாற்றியவர். தமிழ் நவீன அறிவியக்கத்தின் அடித்தளத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். வையாபுரிப்பிள்ளை தேவநேயப் பாவாணர் (பிப்ரவரி 7, 1902- ஜனவரி 15, 1981) ஞா.தேவநேயப் பாவாணர். தமிழறிஞர், சொல்லாராய்ச்சி வல்லுனர், பன்மொழி அறிஞர். தமிழ் மொழியின் வேர்ச்சொற்கள் மற்றும் சொற்களின் வளர்ச்சிமாற்றம் குறித்த ஆய்வுகளுக்காக புகழ்பெற்றவர். பல்வேறு இந்திய மொழிகளில் பயிற்சி கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்திற்கு பங்காற்றியவர். ‘தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி (Etymological Dictionary) இவரால் உருவாக்கப்பட்டது. மொழிஞாயிறு என்னும் பட்டத்துடன் அறியப்படுகிறார். தமிழியம் என அறியப்படும் பண்பாட்டு இயக்கத்தின் முதல்வர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தேவநேயப்பாவணர்புலவர் இரா. இளங்குமரனார் (ஜனவரி 30, 1930 - ஜூலை 25, 2021) தமிழறிஞர், பதிப்பாசிரியர், சொற்பொழிவாளர். தமிழியக்கச் செயற்பாட்டாளர். தொல்தமிழர் திருமணமுறையில் ஏறத்தாழ 5,000 திருமணங்களை நடத்தியவர். ஆய்வு, உரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். இளங்குமரனார்

No comments:

Post a Comment