Friday, May 27, 2022

பதிவுகள்

எஸ். வையாபுரிப்பிள்ளை (அக்டோபர் 12, 1891 - பிப்ரவரி 17, 1956) தமிழறிஞர்,தமிழ் காலக்கணிப்பு, தமிழ்நூல் பதிப்பு, தமிழிலக்கிய வரலாற்றாய்வு ஆகிய தளங்களில் பெரும்பங்களிப்பாற்றிய முன்னோடி. இலக்கியத் திறனாய்வாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் .தமிழாய்வில் புறவயமான , பற்றற்ற முறைமையை வலியுறுத்திய வழிகாட்டி. தமிழின் முதல் பேரகராதியை உருவாக்கியவர். மலையாளப் பேரகராதியிலும் பங்களிப்பாற்றியவர். தமிழ் நவீன அறிவியக்கத்தின் அடித்தளத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். எஸ்.வையாபுரிப்பிள்ளை சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர். புனைவிலக்கியம், கவிதை, இலக்கிய விமர்சனம் ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். பசுவய்யா என்ற பெயரில் கவிதைகள் எழுதினார். காலச்சுவடு இலக்கிய இதழின் நிறுவனர். இலக்கிய ஆளுமையாகவும், அழகியல் சார்ந்த இலக்கியப்பார்வையை முன்வைக்கும் சிந்தனைமரபின் தனது காலகட்டத்தின் மையமாகவும் திகழ்ந்தார். சுந்தர ராமசாமி ஜெயகாந்தன் (த. ஜெயகாந்தன்) (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 8, 2015) தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியிலும் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸிலும் ஒத்திசைந்து பணியாற்றியவர். ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் தமிழகத்தின் இடதுசாரி தரப்பின் அறக்குரலாகவும், இடதுசாரிப்பார்வையின் மெய்யியலை தேடியவராகவும் மதிப்பிடப்படுகிறார். ஜெயகாந்தன்

No comments:

Post a Comment