Saturday, September 24, 2022

sivaithaa

  சி.வை. தாமோதரம் பிள்ளை ஆரம்பக்காலத்தில் கிராமப் பாடசாலைமுறையான நிலாப்பள்ளியில் தந்தையிடம் படித்தார். சுன்னாகம் முத்துக்குமார நாவலரிடம் இலக்கணம் படித்தார். பின்னர் அமெரிக்க மிஷனரிகள் தொடங்கிய வட்டுக்கோட்டை குருமடம் அமைப்பில் 1844 அக்டோபர் 12 ஆம் தேதி சேர்ந்து 1850 வரை பயின்றார். தெல்லிப்பழை (தெல்லியம்பதி) அமெரிக்க இலங்கை மிஷன் கல்லூரியிலும் படித்தார் (1850-52). தமிழ்ப்புலவர் படிப்பில் சான்றிதழ் பெற்றார். ஆங்கில மொழி அறிவும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பும் பெற்றார். வட்டுக்கோட்டை குருமடத்துக்கு உரிமையான கோப்பாய் ஆசிரியர் கல்லூரியில் 1852 செப்டெம்பர் முதல் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது மாணவர்களுக்காக குமரகுருபரரின் நீதிநெறிவிளக்கம் என்னும் நூலை உரை எழுதி வெளியிட்டார் என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.

1855-ல் வட்டுக்கோட்டை குருமடம் மூடப்பட்டது. 1855-ல் சென்னையில் பீட்டர் பெர்சிவல் நடத்தி வந்த தினவர்த்தமானி வாரப்பத்திரிகையில் சி.வை.தாமோதரம்பிள்ளை உதவியாசிரியராகச் சேர்ந்தார். பத்திரிகைப் பணியுடன் பர்னல் பண்டிதர், வால்டர் எலியட், லூஷிங்டன் ஆகியோருக்கு தமிழ் கற்பிக்கும் பணியையும் செய்தார். சென்னையில் மிரன் வின்ஸ்லோ நடத்தி வந்த அமெரிக்க மதராஸ் மிஷன் அமைப்பின் அகராதிப்பணிகளுடன் தொடர்புகொண்டிருந்தார்

si.vai thaamootharam

ச.வே.சுப்ரமணியம் தீவிரமான தமிழ்ப்பற்றில் இருந்து உருவாகும் வழிபாட்டுணர்வுடன் ஆய்வுகளை மேற்கொண்டவர். ஆகவே பெரும்பாலும் நயம்பாராட்டல், விதந்தோதல் ஆகிய கோணங்களிலேயே அவருடைய ஆய்வுகள் உள்ளன. மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளைஎஸ். வையாபுரிப் பிள்ளைகே.என். சிவராஜ பிள்ளை போன்ற ஆய்வாளர்களின் புறவயமான பார்வையோ முறைமையோ அவரிடமில்லை. தமிழ் நூல்களின் காலங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்கிறார்.

savee supramaniyam

-----------

டேனியல் பூர் மதுரையில் ஆறுவருடங்கள் இருந்தார். முப்பத்தேழு பள்ளிக்கூடங்களை நிறுவினார். ஊர்கள் தோறும் சென்று மதப்போதனை செய்து, கல்விநிலையங்களை உருவாக்கினார். பலமுறை மக்களிடம் குதிரைமீது அமர்ந்துகொண்டே உரையாற்றினார் . ஓராண்டில் ஐம்பத்தாறு பள்ளிகளாக பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்தினார். 1836ல் திண்டுக்கல், திருமங்கலம் ஆகிய ஊர்களிலும் 1838ல் திருபுவனத்திலும் அமெரிக்க பள்ளிகள் தொடங்கப்பட்டன. பூர் மதுரை அமெரிக்கன் மிஷனை வலுப்படுத்தினார். மதுரையில் மதுரை அமெரிக்கன் கல்லூரியை நிறுவினார் (பார்க்க அமெரிக்க மதுரை மிஷன்)

deeniyal puur

---------------


No comments:

Post a Comment