Friday, September 16, 2022

கட்டுரைகள்

  ஞானியார் சுவாமிகளின் இரு இயல்புகளை திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் தன் தன்வரலாற்றில் குறிப்பிடுவதை வல்லிக்கண்ணன் மேற்கோளாகச் சுட்டுகிறார். ஞானியார் சுவாமிகள் தன் 16-ஆவது வயதில் துறவு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அப்போது தன் ஆசிரியருக்கு வாக்களித்ததன்படி மடத்தின் தலைவருக்குரிய நோன்புகளில் சமரசம் செய்துகொள்ளவே இல்லை. தன் வாழ்நாள் முழுக்க மேனா என்னும் மூடிய பல்லக்கிலேயே பயணம் செய்தார். திரு.வி.க உள்ளிட்ட பலர் வற்புறுத்தியும் அவர் காரில் ஏறவில்லை. அவரை 1941-ல் இராமசாமி நாயுடு என்னும் அன்பர் தென்னாப்ரிக்காவுக்கு அழைத்தபோது தன் நோன்புகளுக்கு கடல்கடத்தல் எதிரானது என மறுத்துவிட்டார். ஆனால் குடை, கொடி, தீவட்டி, சாமரம் போன்ற பழங்கால வழக்கங்களை ஆடம்பரமானவை என தவிர்த்துவிட்டார்.

ஞானியார் அடிகள் வீரசைவத்தின் உறுதியான சைவப்பற்றை மதவெறியாக ஆக்கிக் கொள்ளவில்லை. வைணவர் இல்லங்களில் ஆண்டாள் வரலாறு உள்ளிட்ட சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கிறார். புதுச்சேரியில் சின்னையா ஞானப்பிரகாச முதலியார் என்னும் கிறிஸ்தவ அன்பரின் அழைப்பின் பேரில் அவருடைய இல்லத்துக்குச் சென்று உரையாற்றினார். ஞானியார் சுவாமிகள் தலைமை வகித்த சென்னை சைவசித்தாந்த சமாஜத்தின் செயலர் பொறுப்பில் இருந்த பூவை கலியாணசுந்தர முதலியார் அதைக் கண்டித்து தன் பதவியை துறந்தார். ஆனால் ஞானியார் சுவாமிகள் சமயப்பிடிவாதம் அறியாமை என்னும் உறுதியுடனிருந்தார்.

ஞானியாரடிகள்

சித்தூர் சுப்ரமணிய பிள்ளையை இசையறிந்தோர் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். இப்போதுகூட யூ.டியுபில் அவருடைய கச்சேரிகள் கிடைக்கின்றன. ஆனால் அவர் அறியப்படும் அச்சாதியைச் சேர்ந்தவரல்ல என்று தெரிந்திருக்காது. மதமாற்றம் போல சாதிமாற்றமும் செய்துகொண்டவர் அவர்

சித்தூர் சுப்ரமணிய பிள்ளை

காவிய வாழ்க்கை என சில வாழ்க்கைகளையே சொல்ல முடியும். வாழும் காலம் முழுக்க, ஒவ்வொரு கணமும், அடுத்த நிமிடம் கிளம்பபோகிறவர்கள் போல செயலாற்றிக் கொண்டே இருப்பவர்கள். சே.ப.நரசிம்மலு நாயுடு அவர்களில் ஒருவர். எத்தனை வாழ்க்கைக் களங்களில் அவர் தமிழகத்திற்கு முன்னோடி என்னும் திகைப்பு எவருக்கும் உருவாகும். இன்றைய தமிழகத்தின் சிற்பிகளில் ஒருவர்

சே.ப.நரசிம்மலு நாயுடு

No comments:

Post a Comment