Tuesday, August 23, 2022

கேஎன்

  திருவனந்தபுரம் புத்தம்சந்தையில் உள்ள சைவப்பிரகாச சபையில் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளைஎஸ். வையாபுரிப் பிள்ளை உள்ளிட்ட அறிஞர்கள் கூடி விவாதித்துவந்தனர். கே.என்.சிவராஜ பிள்ளையும் அவ்விவாதங்களில் ஈடுபட்டார். திருவனந்தபுரத்தில் இருந்த இலக்கியக் கழகம் என்னும் அமைப்பு சார்பில் பொதுவிவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ராஜாஜி தலைமையில் Trivandrum Literary Club அரங்கில் இலக்கியக் கழகம் சார்பில் நிகழ்ந்த ஒரு பொதுவிவாதத்தில் கே.என்.சிவராஜ பிள்ளை வர்ணாசிரம முறை இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை என்று பேச வர்ணாசிரமத்தை ஆதரித்து சுப்ரமணிய ஐயர் எம்.ஏ பேசினார். இவ்விவாதங்களை தொகுத்து கே.என்.சிவராஜ பிள்ளை Indian Social idol Review என்ற பேரில் 200 பக்க நூலாக வெளியிட்டார். வர்ணாசிரம தர்மம் ஆரியர்களால் திராவிடர்கள் மேல் சுமத்தப்பட்டது என்று அதில் கே.என்.சிவராஜ பிள்ளை வாதிட்டார். சடங்குகளுக்கும் சாதிகளுக்கும் பிரிக்கமுடியாத உறவுள்ளது என்று கூறினார். பின்னாளில் திராவிட இயக்கத்தவர் இந்நூலின் கருத்துக்களை விரிவாக எடுத்தாண்டனர். திருவனந்தபுரம் சமூக உரிமைக் கழகம் என்ற அமைப்பில் முதல் மாநாட்டில் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு சிறுபிரசுரமாக வந்திருக்கிறது.

சென்னைப் பல்கலைக்கழக வெளியீடான Agastya in the Tamil land (1930) என்னும் ஆங்கில நூலில் Early History of Decah (Bhahdagar), History of Ancient Sanskrit Literature (Maxmuller), The Great Epic of India (Hopkins) ஆகிய மூன்று நூல்களின் அடிப்படையில் அகத்தியரை கே.என்.சிவராஜ பிள்ளை ஆராய்ந்தார். அகத்தியரை இராமாயண, ரிக்வேத நூல்களின்படி பார்ப்பது வழக்கம். அகத்தியர் குறித்த தொன்மம் கம்போடியா, இந்தோனேஷியா தீவுகளில் உண்டு. பெரும்பாலும் இவை கற்பனையின் அடிப்படையில் உருவானவை. தொல்காப்பியர் அகத்தியரைக் குறிக்கவில்லை. காரிக்கண்ணனார் ஆலத்தூர் கிழார், தாமப்பல் கண்ணனார் போன்ற புலவர்களின் பாடல்களின் அடிப்படையில் அகத்தியரைப் பார்ப்பனர் என்று முடிவு செய்துள்ளனர். எனவே அகத்தியர் குறித்த பழைய தொன்மத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என்கிறார். (பார்க்க தமிழகத்தில் அகத்தியர் )

கே.என்.சிவராஜ பிள்ளை

======================

பாரதி இந்தியா இதழின் பொறுப்பை ஏற்றதும் பத்திரிகையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக அதன் தலையங்கம் எழுதுவதில் தனி நடை உருவாகியது. இதனை இந்தியாவின் பிற்கால இதழ்களான அமிர்தகுண போதினி (நவம்பர் 1928), விவேகபாநு, ரங்கூன் சுதேச பரிபாலினி, இந்து சாதனம், சுதேசமித்திரன் போன்ற இதழ்கள் பாராட்டியதன் மூலம் அறிய முடிகிறது.

இந்தியா 

======

கே.முத்தையா தீக்கதிர் வார இணைப்பு, செம்மலர் இதழ்களில் தொடர்ச்சியாக இலக்கிய விமர்சனக்குறிப்புகளும் கதைகளும் எழுதினார். சோஷலிச யதார்த்தவாத அழகியலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த கே.முத்தையா தமிழ் மரபிலக்கியங்களை அந்த அடிப்படையில் ஆராய்ந்தார். சோஷலிச யதார்த்தவாத அடிப்படையில் நாவல்களை எழுதினார். உலைக்களம், விளைநிலம் என்னும் இருநாவல்களும் குறிப்பிடத்தக்கவை. சோஷலிச யதார்த்தவாத அழகியலை ஏற்று எழுதும் டி.செல்வராஜ்,

கே. முத்தையா


No comments:

Post a Comment