Saturday, September 24, 2022

sivaithaa

  சி.வை. தாமோதரம் பிள்ளை ஆரம்பக்காலத்தில் கிராமப் பாடசாலைமுறையான நிலாப்பள்ளியில் தந்தையிடம் படித்தார். சுன்னாகம் முத்துக்குமார நாவலரிடம் இலக்கணம் படித்தார். பின்னர் அமெரிக்க மிஷனரிகள் தொடங்கிய வட்டுக்கோட்டை குருமடம் அமைப்பில் 1844 அக்டோபர் 12 ஆம் தேதி சேர்ந்து 1850 வரை பயின்றார். தெல்லிப்பழை (தெல்லியம்பதி) அமெரிக்க இலங்கை மிஷன் கல்லூரியிலும் படித்தார் (1850-52). தமிழ்ப்புலவர் படிப்பில் சான்றிதழ் பெற்றார். ஆங்கில மொழி அறிவும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பும் பெற்றார். வட்டுக்கோட்டை குருமடத்துக்கு உரிமையான கோப்பாய் ஆசிரியர் கல்லூரியில் 1852 செப்டெம்பர் முதல் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது மாணவர்களுக்காக குமரகுருபரரின் நீதிநெறிவிளக்கம் என்னும் நூலை உரை எழுதி வெளியிட்டார் என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.

1855-ல் வட்டுக்கோட்டை குருமடம் மூடப்பட்டது. 1855-ல் சென்னையில் பீட்டர் பெர்சிவல் நடத்தி வந்த தினவர்த்தமானி வாரப்பத்திரிகையில் சி.வை.தாமோதரம்பிள்ளை உதவியாசிரியராகச் சேர்ந்தார். பத்திரிகைப் பணியுடன் பர்னல் பண்டிதர், வால்டர் எலியட், லூஷிங்டன் ஆகியோருக்கு தமிழ் கற்பிக்கும் பணியையும் செய்தார். சென்னையில் மிரன் வின்ஸ்லோ நடத்தி வந்த அமெரிக்க மதராஸ் மிஷன் அமைப்பின் அகராதிப்பணிகளுடன் தொடர்புகொண்டிருந்தார்

si.vai thaamootharam

ச.வே.சுப்ரமணியம் தீவிரமான தமிழ்ப்பற்றில் இருந்து உருவாகும் வழிபாட்டுணர்வுடன் ஆய்வுகளை மேற்கொண்டவர். ஆகவே பெரும்பாலும் நயம்பாராட்டல், விதந்தோதல் ஆகிய கோணங்களிலேயே அவருடைய ஆய்வுகள் உள்ளன. மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை, கே.என். சிவராஜ பிள்ளை போன்ற ஆய்வாளர்களின் புறவயமான பார்வையோ முறைமையோ அவரிடமில்லை. தமிழ் நூல்களின் காலங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்கிறார்.

savee supramaniyam

-----------

டேனியல் பூர் மதுரையில் ஆறுவருடங்கள் இருந்தார். முப்பத்தேழு பள்ளிக்கூடங்களை நிறுவினார். ஊர்கள் தோறும் சென்று மதப்போதனை செய்து, கல்விநிலையங்களை உருவாக்கினார். பலமுறை மக்களிடம் குதிரைமீது அமர்ந்துகொண்டே உரையாற்றினார் . ஓராண்டில் ஐம்பத்தாறு பள்ளிகளாக பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்தினார். 1836ல் திண்டுக்கல், திருமங்கலம் ஆகிய ஊர்களிலும் 1838ல் திருபுவனத்திலும் அமெரிக்க பள்ளிகள் தொடங்கப்பட்டன. பூர் மதுரை அமெரிக்கன் மிஷனை வலுப்படுத்தினார். மதுரையில் மதுரை அமெரிக்கன் கல்லூரியை நிறுவினார் (பார்க்க அமெரிக்க மதுரை மிஷன்)

deeniyal puur

---------------


Friday, September 16, 2022

கட்டுரைகள்

  ஞானியார் சுவாமிகளின் இரு இயல்புகளை திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் தன் தன்வரலாற்றில் குறிப்பிடுவதை வல்லிக்கண்ணன் மேற்கோளாகச் சுட்டுகிறார். ஞானியார் சுவாமிகள் தன் 16-ஆவது வயதில் துறவு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அப்போது தன் ஆசிரியருக்கு வாக்களித்ததன்படி மடத்தின் தலைவருக்குரிய நோன்புகளில் சமரசம் செய்துகொள்ளவே இல்லை. தன் வாழ்நாள் முழுக்க மேனா என்னும் மூடிய பல்லக்கிலேயே பயணம் செய்தார். திரு.வி.க உள்ளிட்ட பலர் வற்புறுத்தியும் அவர் காரில் ஏறவில்லை. அவரை 1941-ல் இராமசாமி நாயுடு என்னும் அன்பர் தென்னாப்ரிக்காவுக்கு அழைத்தபோது தன் நோன்புகளுக்கு கடல்கடத்தல் எதிரானது என மறுத்துவிட்டார். ஆனால் குடை, கொடி, தீவட்டி, சாமரம் போன்ற பழங்கால வழக்கங்களை ஆடம்பரமானவை என தவிர்த்துவிட்டார்.

ஞானியார் அடிகள் வீரசைவத்தின் உறுதியான சைவப்பற்றை மதவெறியாக ஆக்கிக் கொள்ளவில்லை. வைணவர் இல்லங்களில் ஆண்டாள் வரலாறு உள்ளிட்ட சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கிறார். புதுச்சேரியில் சின்னையா ஞானப்பிரகாச முதலியார் என்னும் கிறிஸ்தவ அன்பரின் அழைப்பின் பேரில் அவருடைய இல்லத்துக்குச் சென்று உரையாற்றினார். ஞானியார் சுவாமிகள் தலைமை வகித்த சென்னை சைவசித்தாந்த சமாஜத்தின் செயலர் பொறுப்பில் இருந்த பூவை கலியாணசுந்தர முதலியார் அதைக் கண்டித்து தன் பதவியை துறந்தார். ஆனால் ஞானியார் சுவாமிகள் சமயப்பிடிவாதம் அறியாமை என்னும் உறுதியுடனிருந்தார்.

ஞானியாரடிகள்

சித்தூர் சுப்ரமணிய பிள்ளையை இசையறிந்தோர் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். இப்போதுகூட யூ.டியுபில் அவருடைய கச்சேரிகள் கிடைக்கின்றன. ஆனால் அவர் அறியப்படும் அச்சாதியைச் சேர்ந்தவரல்ல என்று தெரிந்திருக்காது. மதமாற்றம் போல சாதிமாற்றமும் செய்துகொண்டவர் அவர்

சித்தூர் சுப்ரமணிய பிள்ளை

காவிய வாழ்க்கை என சில வாழ்க்கைகளையே சொல்ல முடியும். வாழும் காலம் முழுக்க, ஒவ்வொரு கணமும், அடுத்த நிமிடம் கிளம்பபோகிறவர்கள் போல செயலாற்றிக் கொண்டே இருப்பவர்கள். சே.ப.நரசிம்மலு நாயுடு அவர்களில் ஒருவர். எத்தனை வாழ்க்கைக் களங்களில் அவர் தமிழகத்திற்கு முன்னோடி என்னும் திகைப்பு எவருக்கும் உருவாகும். இன்றைய தமிழகத்தின் சிற்பிகளில் ஒருவர்

சே.ப.நரசிம்மலு நாயுடு

Monday, September 12, 2022

சுவே

  எம்.ஃபில் இறுதி ஆண்டில் மதுரையில் சுந்தர ராமசாமியக்கு மூன்று நாள் கருத்தரங்கு ஒன்றை பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா, தி.சு. நடராஜன் உதவியுடன் ஏற்பாடு செய்தார். அதில் வண்ணதாசன், ஜெயமோகன், சுரேஷ்குமார இந்திரஜித், நா. ஜெயபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு சுந்தர ராமசாமியின் படைப்புகள் பற்றி பேசினர். சு.வேணுகோபால் தன்னை இலக்கியவாதியாக உணர அந்த நிகழ்ச்சி வழிவகுத்தது.

சு. வேணுகோபால் தன் எழுத்தின் இலக்கிய முன்னோடிகளாக புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, சுந்தர ராமசாமி நால்வரையும் குறிப்பிடுகிறார். தி. ஜானகிராமனை ஆதர்சமாகக் கருதுகிறார். "சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் எழுத்து நடையின் பாதிப்பு என்னிடம் இல்லாவிட்டாலும் அவர்கள் நான் எழுதக் காரணமானவர்கள். நான் எழுத்தாளன் என என்னைக் கர்வம் கொள்ளச் செய்தவர்கள். அந்த வகையில் அவர்கள் என் முன்னோடிகள்" என்கிறார் சு. வேணுகோபால்.

நாவல்editedit source

சு.வேணுகோபால் 1994-ஆம் ஆண்டு ’நுண்வெளி கிரகணங்கள்' என்ற தன் முதல் நாவலை எழுதி முடித்தார். இந்நாவல் சுஜாதா ஏற்பாடு செய்த 1995-ஆம் ஆண்டின் ’குமுதம் ஏர் இந்தியா’ விருதைப் பெற்றது. அதற்குப் பரிசாக அளிக்கப்பட்ட அமெரிக்கப் பயணமும் முக்கியமான அனுபவமாக அமைந்தது. நடுவராக இருந்து நுண்வெளி கிரகணங்கள் நாவலைத் தேர்வு செய்த கோவை ஞானி பின்னாளில் சு. வேணுகோபாலின் குருவாகவும், நண்பராகவும் ஆனார். கோவை ஞானி வழி எஸ்.என். நாகராஜனிடம் சு. வேணுகோபாலுக்கு நட்பு ஏற்பட்டது.

சு.வெணுகோபால்

Wednesday, August 31, 2022

அளவெட்டி

  ஞானியார் சுவாமிகளின் இரு இயல்புகளை திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் தன் தன்வரலாற்றில் குறிப்பிடுவதை வல்லிக்கண்ணன் மேற்கோளாகச் சுட்டுகிறார். ஞானியார் சுவாமிகள் தன் 16-ஆவது வயதில் துறவு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அப்போது தன் ஆசிரியருக்கு வாக்களித்ததன்படி மடத்தின் தலைவருக்குரிய நோன்புகளில் சமரசம் செய்துகொள்ளவே இல்லை. தன் வாழ்நாள் முழுக்க மேனா என்னும் மூடிய பல்லக்கிலேயே பயணம் செய்தார். திரு.வி.க உள்ளிட்ட பலர் வற்புறுத்தியும் அவர் காரில் ஏறவில்லை. அவரை 1941-ல் இராமசாமி நாயுடு என்னும் அன்பர் தென்னாப்ரிக்காவுக்கு அழைத்தபோது தன் நோன்புகளுக்கு கடல்கடத்தல் எதிரானது என மறுத்துவிட்டார். ஆனால் குடை, கொடி, தீவட்டி, சாமரம் போன்ற பழங்கால வழக்கங்களை ஆடம்பரமானவை என தவிர்த்துவிட்டார்.

ஞானியார் அடிகள் வீரசைவத்தின் உறுதியான சைவப்பற்றை மதவெறியாக ஆக்கிக் கொள்ளவில்லை. வைணவர் இல்லங்களில் ஆண்டாள் வரலாறு உள்ளிட்ட சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கிறார். புதுச்சேரியில் சின்னையா ஞானப்பிரகாச முதலியார் என்னும் கிறிஸ்தவ அன்பரின் அழைப்பின் பேரில் அவருடைய இல்லத்துக்குச் சென்று உரையாற்றினார். ஞானியார் சுவாமிகள் தலைமை வகித்த சென்னை சைவசித்தாந்த சமாஜத்தின் செயலர் பொறுப்பில் இருந்த பூவை கலியாணசுந்தர முதலியார் அதைக் கண்டித்து தன் பதவியை துறந்தார். ஆனால் ஞானியார் சுவாமிகள் சமயப்பிடிவாதம் அறியாமை என்னும் உறுதியுடனிருந்தார்.

ஞானியார் அடிகள்

வட்டுக்கோட்டை குருமடம் அமெரிக்க இலங்கை மிஷன் அமைப்பால் (American Board of Commissioners for Foreign Missions - ABCFM) யாழ்ப்பாணம் குடாநாட்டில் வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் ஜூலை 2, 1823- ல் தொடங்கப்பட்டது. மதப்பரப்புநரும் மருத்துவருமான ஜான் ஸ்கட்டர் (John Scudder, Sr) அவர்களின் அமைப்புக்கு துணையமைப்பாக இது ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்காவில் இருந்து கிறிஸ்தவர்கள் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு பத்து டாலர் வீதம் அனுப்ப ஒப்புக்கொண்டு 200 பேர் பணம் அனுப்பினர். அதன் அடிப்படையில் இந்த குருமடம் உருவாக்கப்பட்டது. வெவ்வேறு மிஷன் பள்ளிகளில் படித்த 120 மாணவர்களில் சிறந்த 40 பேர் இதில் சேர்க்கப்பட்டார்கள்.வட்டுக்கோட்டை குருமடத்துடன் தொடர்புடைய புகழ்பெற்ற ஆளுமைகள்



jk

  1949-ல் ஜெயகாந்தன் டிரெடில் என்னும் முதல் கதையை எழுதினார். ஆனால் முதலில் பிரசுரமானது ஆணும் பெண்ணும் என்னும் சிறுகதை. இக்கதை 1953-ல் சௌபாக்யம் இதழில் வெளியானது. இடதுசாரி அறிஞர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், ஆர்.கே.கண்ணன் ஆகியோரின் ஊக்குவித்தலால் இடதுசாரி இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார். தொ.மு.சி. ரகுநாதன், ஆர்.கே.கண்ணன் ஆகியோர் ஏற்கனவே முற்போக்கு இலக்கியத்தை உருவாக்கியிருந்தாலும் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன் ஆகியோரே அதன் வளர்ச்சிக்குக் காரணமான எழுத்தாளர்களாக கருதப்பட்டனர்.

தொ.மு.சி.ரகுநாதனின் சாந்தி, வ.விஜயபாஸ்கரனின் சரஸ்வதி, ப. ஜீவானந்தம் தொடங்கிய தாமரை, மற்றும் சமரன் ஆகிய இதழ்களில் ஜெயகாந்தன் தொடர்ச்சியாக எழுதினார். பொதுவான இலக்கிய இதழ்களான பிரசண்ட விகடன், கிராம ஊழியன் ஆகிய இதழ்களிலும் ஜெயகாந்தன் அவ்வப்போது எழுதினார். இக்காலகட்டத்தில் அவருடைய அணுக்கமான இலக்கியத்தோழராக கவிஞர் தமிழ்ஒளி இருந்தார். கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலத்துடனும் நெருக்கம் இருந்தது. ஆனால் அக்காலத்தில் இருந்த மணிக்கொடி இலக்கியக் குழுவினருடன் அவருக்கு அறிமுகமோ நெருக்கமோ இருக்கவில்லை.

jeyakanthan 

கு.அழகிரிசாமிக்கு மரபிசையில் ஆர்வமும் பயிற்சியும் இருந்தது. அவருடைய ஊரில் மணம் புரிந்திருந்த நாதஸ்வரக் கலைஞர் காருக்குறிச்சி அருணாசலம் அங்கு வரும்போதெல்லாம் உடனிருந்து இசைகேட்டார். இசையறிஞர் விளாத்திக்குளம் சுவாமிகள் பாடுவதை கேட்க தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தார். தமிழில் இசைப்பாடல்களை எழுதுவது, வழக்கொழிந்துபோன இசைப்பாடல்களை தேடித் தொகுப்பது ஆகியவற்றில் ஈடுபட்டதை அவருடைய கடிதங்கள் காட்டுகின்றன. அவர் மலேசியாவில் இருந்தபோது எட்டயபுரம் கடிகை நமசிவாயப் புலவர் இயற்றிய 'வல்லீ பரதம்’ 'முக்கூடற்பள்ளு' ஆகிய இசைநாடகங்களை தயாரித்தார். தியாகராஜர், பாரதியார், கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை போன்றோரின் பாடல்கள் சிலவற்றை ஸ்வரப்படுத்தியிருக்கிறார். அண்ணாமலை ரெட்டியார்ரின் 'காவடிச்சிந்தையும்’ பதிப்பித்தார்.

கு. அழகிரிசாமி

அ.குமாரசுவாமிப் புலவர்   


கம்பதாசன்

அன்புள்ள ஜெ

கம்பதாசன் பற்றிய விக்கி பதிவு அருமையானது. ஒரு கலைக்களஞ்சியத்தை இப்படி ஆர்வமூட்டும்படி படிக்கலாம் என்பதே திகைப்பூட்டுகிறது. அதிலும் அவர் வாழ்க்கை ஒரு காவியநாயகனின் வாழ்க்கை. (எத்தனை பெண்கள்) கம்பதாசன் என்ற பெயரே தகும். கம்பனைப்போலவே வாழ்ந்திருக்கிறார்.

சிபில் கார்த்திகேசு

Wednesday, August 24, 2022

பட்டியல்

  இவ்வாண்டு பட்டியலில் அரிசங்கர், றாம் சந்தோஷ் , சுரேஷ் பிரதீப், வேல்முருகன் இளங்கோ, கார்த்திக் புகழேந்தி ஆகியோரே இலக்கியத் தகுதி கொண்டவர்கள். விருதுபெற்றிருக்கும் பி.காளிமுத்து கவிதைகளை இனிமேல்தான் எழுதவேண்டும். அதற்கு முன் அவர் தமிழில் எழுதப்பட்ட புதுக்கவிதைகளை வாசிக்கவேண்டும். கவிதை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும். எதிர்காலத்தில் அவ்வண்ணம் நிகழுமென்றால் நன்று.

Tuesday, August 23, 2022

கேஎன்

  திருவனந்தபுரம் புத்தம்சந்தையில் உள்ள சைவப்பிரகாச சபையில் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை உள்ளிட்ட அறிஞர்கள் கூடி விவாதித்துவந்தனர். கே.என்.சிவராஜ பிள்ளையும் அவ்விவாதங்களில் ஈடுபட்டார். திருவனந்தபுரத்தில் இருந்த இலக்கியக் கழகம் என்னும் அமைப்பு சார்பில் பொதுவிவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ராஜாஜி தலைமையில் Trivandrum Literary Club அரங்கில் இலக்கியக் கழகம் சார்பில் நிகழ்ந்த ஒரு பொதுவிவாதத்தில் கே.என்.சிவராஜ பிள்ளை வர்ணாசிரம முறை இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை என்று பேச வர்ணாசிரமத்தை ஆதரித்து சுப்ரமணிய ஐயர் எம்.ஏ பேசினார். இவ்விவாதங்களை தொகுத்து கே.என்.சிவராஜ பிள்ளை Indian Social idol Review என்ற பேரில் 200 பக்க நூலாக வெளியிட்டார். வர்ணாசிரம தர்மம் ஆரியர்களால் திராவிடர்கள் மேல் சுமத்தப்பட்டது என்று அதில் கே.என்.சிவராஜ பிள்ளை வாதிட்டார். சடங்குகளுக்கும் சாதிகளுக்கும் பிரிக்கமுடியாத உறவுள்ளது என்று கூறினார். பின்னாளில் திராவிட இயக்கத்தவர் இந்நூலின் கருத்துக்களை விரிவாக எடுத்தாண்டனர். திருவனந்தபுரம் சமூக உரிமைக் கழகம் என்ற அமைப்பில் முதல் மாநாட்டில் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு சிறுபிரசுரமாக வந்திருக்கிறது.

சென்னைப் பல்கலைக்கழக வெளியீடான Agastya in the Tamil land (1930) என்னும் ஆங்கில நூலில் Early History of Decah (Bhahdagar), History of Ancient Sanskrit Literature (Maxmuller), The Great Epic of India (Hopkins) ஆகிய மூன்று நூல்களின் அடிப்படையில் அகத்தியரை கே.என்.சிவராஜ பிள்ளை ஆராய்ந்தார். அகத்தியரை இராமாயண, ரிக்வேத நூல்களின்படி பார்ப்பது வழக்கம். அகத்தியர் குறித்த தொன்மம் கம்போடியா, இந்தோனேஷியா தீவுகளில் உண்டு. பெரும்பாலும் இவை கற்பனையின் அடிப்படையில் உருவானவை. தொல்காப்பியர் அகத்தியரைக் குறிக்கவில்லை. காரிக்கண்ணனார் ஆலத்தூர் கிழார், தாமப்பல் கண்ணனார் போன்ற புலவர்களின் பாடல்களின் அடிப்படையில் அகத்தியரைப் பார்ப்பனர் என்று முடிவு செய்துள்ளனர். எனவே அகத்தியர் குறித்த பழைய தொன்மத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என்கிறார். (பார்க்க தமிழகத்தில் அகத்தியர் )

கே.என்.சிவராஜ பிள்ளை

======================

பாரதி இந்தியா இதழின் பொறுப்பை ஏற்றதும் பத்திரிகையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக அதன் தலையங்கம் எழுதுவதில் தனி நடை உருவாகியது. இதனை இந்தியாவின் பிற்கால இதழ்களான அமிர்தகுண போதினி (நவம்பர் 1928), விவேகபாநு, ரங்கூன் சுதேச பரிபாலினி, இந்து சாதனம், சுதேசமித்திரன் போன்ற இதழ்கள் பாராட்டியதன் மூலம் அறிய முடிகிறது.

இந்தியா 

======

கே.முத்தையா தீக்கதிர் வார இணைப்பு, செம்மலர் இதழ்களில் தொடர்ச்சியாக இலக்கிய விமர்சனக்குறிப்புகளும் கதைகளும் எழுதினார். சோஷலிச யதார்த்தவாத அழகியலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த கே.முத்தையா தமிழ் மரபிலக்கியங்களை அந்த அடிப்படையில் ஆராய்ந்தார். சோஷலிச யதார்த்தவாத அடிப்படையில் நாவல்களை எழுதினார். உலைக்களம், விளைநிலம் என்னும் இருநாவல்களும் குறிப்பிடத்தக்கவை. சோஷலிச யதார்த்தவாத அழகியலை ஏற்று எழுதும் டி.செல்வராஜ்,

கே. முத்தையா