ஆசிரியர் வி.மரிய அந்தோனி இந்தக் காவியத்தை 1968 முதல் 1983 வரை பதினைந்தாண்டுகள் எழுதினார். மரிய அந்தோனி 1983-ல் மறைந்தபின் இருபதாண்டுகள் கழித்து 2006-ல் இக்காவியம் நூலாக வெளிவந்தது. கதிரவன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது.
ஜி. நாகராஜன் முதலில் காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்டுத் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன் ஜி.நாகராஜனின் சிந்தனையில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியவர். சரஸ்வதி ஆசிரியர் வ.விஜயபாஸ்கரனுடன் தொடர்ச்சியாக கடிதத்தொடர்பில் இருந்தார்.
ஜி.நாகராஜன்
மாகோவை தேவாங்க குலகுரு ஸ்ரீஸ்ரீசதாசிவானந்த தேசிக சுவாமிகளும், கலப்பதி ஸ்ரீஸ்ரீதொட்டய்ய தேசிகரும் சமஸ்கிருதத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த தேவாங்க புராணத்தை மாம்பழக் கவிச்சிங்க நாவலர் தமிழில் கவிதையாக இயற்றினார். போடிநாயக்கனூர் ஜமீன்தாரராகிய திருவங்காரு திருமலைபோடய காமராசய பாண்டிய நாயக்க துரை ஆதரவில் போடிநாயக்கனூர் ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. (பார்க்க தேவாங்க புராணம்)ம்பழக் கவிச்சிங்க ராயர்
- சுவாமி விபுலானந்தர் இயற்றிய மதங்க சூளாமணியின் கருத்தைத் தழுவி வட மொழிச் சொற்களைத் தவிர்த்து அதன் மறுபதிப்பாகவும்,ஆய்வாகவும் கருதும்படி 320 செய்யுள்கள் கொண்ட கூத்துநூல்விருத்தம் எழுதினார்.பாடல்களுக்கு உரையெழுதுவதே உலக வழக்கம், ஈழப்பூராடனார் உரைக்குப் பாட்டெழுதினார்.